Wednesday, August 12, 2009

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

KRS கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சின்னக் கண்ணன் அழைக்கிறான் லிரிக்ஸை பதிவா போட்டிருக்காரு.

ரீதி கவுளை ராகத்தில் அமைந்த (உபயம்: KRS) பாடல், ராசாவின் முத்துக்களில், பெரிய முத்து.
பாலமுரளிகிருஷ்ணா, எப்பேர்பட்ட வித்வானாயிருந்திருந்தாலும், இந்த ஒரு பாட்டின் மூலம் தான், என்னை மாதிரி பாமரனுக்கும் கண்ணில் பட்டாரு.

பாட்டின் இசை சிம்பிளா இருக்கும். ஃப்ளூட் பீஸ் சூப்பரா இருக்கும்.

பாட்டை இன்னிக்கு கேட்டதும், தூங்கிக்கிட்ட இருந்த சிங்கம் உருமிகிட்டு எழுந்துடுச்சு.

எடுத்தேன் மைக்கை, க்ளிக்குனேன், KRSன் லிரிக்கை, திறந்தேன் வாயை.

மத்ததெல்லாம் கீழே. வால்யூமை கொறச்சு வச்சு கேளுங்க. பயந்தா, கொம்பேனியார் பொறுப்பில்லை.

Get this widget | Track details | eSnips Social DNA


மேல பாட்டு பொட்டி தெரியாதவங்க, இங்க கிளிக்க கேக்கலாம். வுடமாட்டோம்ல ;)

கேட்டாச்சுல்ல? கருத்த சொல்லுங்க.

லேப்டாப்/மைக்கு இருக்கர அன்பர்கள் நண்பர்கள், பாடி பதிவேத்தி, லிங்கை அனுப்புங்க.

பதிவேத்த வகையில்லாதவங்க, mp3ஐ surveysan2005 at yahoo . comக்கு மின்னஞ்சல் செய்யுங்க.

நன்னி!

பி.கு: ஹாப்பி கிருஷ்ண ஜெயந்தி. (13ஆம் தேதியா கி.ஜெயந்தி? எங்க வூட்ல கேட்டா அடுத்த மாசம்டான்னாங்க? கிருஷ்ணர் பர்த்டேலையே கொழப்பமா? )