Wednesday, August 12, 2009

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

KRS கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சின்னக் கண்ணன் அழைக்கிறான் லிரிக்ஸை பதிவா போட்டிருக்காரு.

ரீதி கவுளை ராகத்தில் அமைந்த (உபயம்: KRS) பாடல், ராசாவின் முத்துக்களில், பெரிய முத்து.
பாலமுரளிகிருஷ்ணா, எப்பேர்பட்ட வித்வானாயிருந்திருந்தாலும், இந்த ஒரு பாட்டின் மூலம் தான், என்னை மாதிரி பாமரனுக்கும் கண்ணில் பட்டாரு.

பாட்டின் இசை சிம்பிளா இருக்கும். ஃப்ளூட் பீஸ் சூப்பரா இருக்கும்.

பாட்டை இன்னிக்கு கேட்டதும், தூங்கிக்கிட்ட இருந்த சிங்கம் உருமிகிட்டு எழுந்துடுச்சு.

எடுத்தேன் மைக்கை, க்ளிக்குனேன், KRSன் லிரிக்கை, திறந்தேன் வாயை.

மத்ததெல்லாம் கீழே. வால்யூமை கொறச்சு வச்சு கேளுங்க. பயந்தா, கொம்பேனியார் பொறுப்பில்லை.

Get this widget | Track details | eSnips Social DNA


மேல பாட்டு பொட்டி தெரியாதவங்க, இங்க கிளிக்க கேக்கலாம். வுடமாட்டோம்ல ;)

கேட்டாச்சுல்ல? கருத்த சொல்லுங்க.

லேப்டாப்/மைக்கு இருக்கர அன்பர்கள் நண்பர்கள், பாடி பதிவேத்தி, லிங்கை அனுப்புங்க.

பதிவேத்த வகையில்லாதவங்க, mp3ஐ surveysan2005 at yahoo . comக்கு மின்னஞ்சல் செய்யுங்க.

நன்னி!

பி.கு: ஹாப்பி கிருஷ்ண ஜெயந்தி. (13ஆம் தேதியா கி.ஜெயந்தி? எங்க வூட்ல கேட்டா அடுத்த மாசம்டான்னாங்க? கிருஷ்ணர் பர்த்டேலையே கொழப்பமா? )

28 comments:

ஆயில்யன் said...

//ஹாப்பி கிருஷ்ண ஜெயந்தி. (13ஆம் தேதியா கி.ஜெயந்தி? எங்க வூட்ல கேட்டா அடுத்த மாசம்டான்னாங்க? கிருஷ்ணர் பர்த்டேலையே கொழப்பமா? )//

பாஸ் இன்னிக்கு கோகுலாஷ்டமின்னாங்களே அப்பன்னா அது என்ன...? :)

ஆயில்யன் said...

//நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!///

இந்த ஏரியாவுல எப்படி அசத்தியிருக்கீங்கன்னு கேக்க ஆசைதான் - (ஆபிஸ்ல ஆடியோ வசதி செஞ்சு தர்ல வூட்ல போய் கேட்டுட்டு சொல்றேன் :))

SurveySan said...

ஆயில்யன்,

////இந்த ஏரியாவுல எப்படி அசத்தியிருக்கீங்கன்னு கேக்க ஆசைதான்////

விதி யாரை விட்டுது? :)

///(ஆபிஸ்ல ஆடியோ வசதி செஞ்சு தர்ல வூட்ல போய் கேட்டுட்டு சொல்றேன் :))///

எந்த டாமேஜுக்கும் கொம்பேனியார் பொறுப்பில்லை ;)

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன்

ஆடில ஒரு தடவை, ஆவணியில் ஒரு தடவை கண்ணன் பிறக்கிறார் இந்த வருடம். அதிர்ஷ்டம் தான் நமக்கு.


செப்டம்பர் 12ஆம் நாள் வைஷ்ணவ ஸ்ரீஜயந்தி என்று போட்டு இருக்கு:)

சர்வேஸ் கணீர்னு பாடி அழைச்சுட்டாரே. நல்லா இருந்ததும்மா

ஷைலஜா said...

சர்வேஸ்

ரொம்பநாள்கழிச்சி நேயர்விருப்பம்! மகிழ்ச்சி மிகவும்

இருங்க சுமாராபாடவந்தா பாடி அனுப்பறேன்!

கானா பிரபா said...

தல

இப்படியா சின்னப்பசங்கள பயப்படுத்துறது அவ்வ்வ் போங்க உங்க கூட கா

ஆயில்யன் said...

கேட்டாச்சு பாஸ் ஒ.கே பிசிறு இல்லாம கலக்கிட்டீங்க :)))

குறிப்பா நான் சொன்ன ஏரியாவுல ஒ.கே (ராதா சொல்லும்போது ஒரு பரவசமோ...?)

:)))

SurveySan said...

Valli madam, danks! :)

SurveySan said...

shailaja,

//இருங்க சுமாராபாடவந்தா பாடி அனுப்பறேன்!///

dhool. waiting :)

SurveySan said...

Gana Prabha,

////இப்படியா சின்னப்பசங்கள பயப்படுத்துறது அவ்வ்வ் போங்க உங்க கூட கா///

ungalukku en mela irukkara poraamai purinjukka mudiyudhu.

try pannunga ungalukkum varum. edha paadinaalum kekka inga naangellaam irukkom ;)

SurveySan said...

Aayilyan,

////குறிப்பா நான் சொன்ன ஏரியாவுல ஒ.கே (ராதா சொல்லும்போது ஒரு பரவசமோ...?)////

paravasamellaam illeenga. moochu vaangirukkum. dhum pathalai ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கி.ஜெயந்தி//

யாரு சர்வேசண்ணே இந்த கி. ஜெயந்தி?
அவங்க அப்பா பேரு கிருஷ்ணமூர்த்தியா? :))

ஒரு இன்ட்ரோ கொடுங்களேன்! கி.கிட்ட இல்ல! ஜெயந்தி கிட்ட! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னடா நேயர் விருப்பம் ரொம்ப நாளாக் காணோமே-ன்னு நினைச்சேன்! இப்ப நான் புண்ணியம் கட்டிக்கிட்டேனா? சூப்பரு! ட்ரை பண்ணுறேன்! உங்க அளவுக்கு எல்லாம் எனக்குப் பாட்டு படிக்க வராது-ண்ணே! :)

//கானா பிரபா said...
தல
இப்படியா சின்னப்பசங்கள பயப்படுத்துறது அவ்வ்வ் போங்க உங்க கூட கா//

ஹா ஹா ஹா!
கா.பி. அண்ணாச்சி, கையக் கொடுங்க! கலக்கிட்டீய! :)

சின்னக் கண்ணன் உதைக்கிறான்!
சின்னக் கண்ணன் உதைக்கிறான்!
வேசனை, சர் வேசனை
அவன் பயங் கொள்ளும் பயங்கரப் பாட்டினைக் கேட்டே...
சின்னக் கண்ணன் உதைக்கிறான்!

:))

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...



////! :)

சின்னக் கண்ணன் உதைக்கிறான்!
சின்னக் கண்ணன் உதைக்கிறான்!
வேசனை, சர் வேசனை
அவன் பயங் கொள்ளும் பயங்கரப் பாட்டினைக் கேட்டே...
சின்னக் கண்ணன் உதைக்கிறான்!///


ஆஹா! குழந்தையை வயிற்றில் வச்சிருக்கும் அம்மாக்கள் பாடும்பாட்டா இது ரவி அவர்களே?:)

:))

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கி.ஜெயந்தி//

யாரு சர்வேசண்ணே இந்த கி. ஜெயந்தி?
அவங்க அப்பா பேரு கிருஷ்ணமூர்த்தியா? :))

ஒரு இன்ட்ரோ கொடுங்களேன்! கி.கிட்ட இல்ல! ஜெயந்தி கிட்ட! :)

August 13, 2009 12:15
//பாரீஸ் போய்வந்ததிலிருந்து ஒண்ணும் சரி இல்ல:):)

VSK said...

நல்லாவே பாடியிருக்கீங்க சர்வேசன்.
கூடுமான வரைக்கும் அந்த 'நேசல்' வாய்ஸைக் குறைக்கப் பாருங்க!
[சூப்ப சி்ங்கர் பார்த்து ரொம்பவே கெட்டுப் போயிட்டேன்!:))]

இதுவரைக்கும் பாடினதுலியே இதுதான் சூப்பர்!

நானும் ட்ரை பண்றேன் விரைவில்!

VSK said...

இப்ப, இந்த கோகுலாஷ்டமி பத்தி கொஞ்சம்!

கண்ணன் பிறக்கறதுக்கு ஒரு நாலு விஷயம் இருக்கணும்.
தேய்பிறை, அஷ்டமி, ரோஹிணி, ஆவணி.

இதுல இன்னொண்னும் இருக்கு!
அந்த ரோஹிணி நட்சத்திரம் ராத்திரியிலியும் இருக்கனும்!
ஏன்ன, கண்ணன் நள்ளிரவில்தான் பிறந்தாராம்!

அப்படிப் பார்த்தா, ஆவணியில் வரும் தேய்பிறை, அஷ்டமி ரோஹிணி ரா தங்கலை!
இன்னிக்கு வர்ற ரோஹிணி ராத்தங்குது!
அதனால, இன்னிக்கே இந்த வருஷம் கண்ணன் பிறந்துட்டாரு!

ஆடியில் வந்தாலும் பரவாயில்லைன்னு!

இன்னிக்குத்தான் கோகுலாஷ்டமி!
அதான் ஸ்ரீஜயந்தி, ஜன்மாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி!

எல்லாமே ஒண்ணுதான்!
சைவர்கள் தென்னிந்தியாவில் கொண்டாடறது கோகுலாஷ்டமி.
வைஷ்ணவர்கள் தென்னிந்தியாவில் இதை ஸ்ரீஜெயந்தின்னு மறுநாளைக்குக் கொண்டாடறாங்க!
ஆமாம்! தென்னிந்தியாவில் மட்டுமே!
வடக்குல இதெல்லாம் இல்லை!
ஒரே நாள்தான்!
:))

SurveySan said...

KRS,

///யாரு சர்வேசண்ணே இந்த கி. ஜெயந்தி?
அவங்க அப்பா பேரு கிருஷ்ணமூர்த்தியா? :))////

வாங்க அண்ணாச்சி. நல்ல கேட்டீங்க ஒரு கேள்வி. உம்மாச்சி கண்ண குத்திடப் போவுது ;)

பி.கு: கிருஷ்ணாபுரம் ஜெயந்திக்கும், இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிக்கறேன்.

SurveySan said...

///வேசனை, சர் வேசனை
அவன் பயங் கொள்ளும் பயங்கரப் பாட்டினைக் கேட்டே...
////

ஆகாககாகா... அம்புட்டு மயம் வருதா. ஒதைக்கத் தோணார அளவுக்கு?
ஐயோ பாவம், நீங்கெல்லாம் :)

SurveySan said...

VSK,

////கூடுமான வரைக்கும் அந்த 'நேசல்' வாய்ஸைக் குறைக்கப் பாருங்க!
[சூப்ப சி்ங்கர் பார்த்து ரொம்பவே கெட்டுப் போயிட்டேன்!:))]/////

ஹிஹி. பாயிண்ட் நோட்டட்.
வூட்லயும் அதுதான் சொன்னாங்க.
ஆமா, அது எப்படிங்க குறைக்கறது? ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க, அடுத்த சூப்பர் சிங்கருக்கு எல்லாரும் ரெடியாயிடலாம். :)

////இதுவரைக்கும் பாடினதுலியே இதுதான் சூப்பர்!////

தன்யனானேன்.
அப்படீன்னா,, இதுக்கு முன்னாடி பாடின பாட்டெல்லாம் கர்ண கொடூரமா? அதையும் கேட்டு பின்னூட்டிய அன்பர்கள் அனைவருக்கும் நன்னீ!!!:)

////

VSK said...

//அப்படீன்னா,, இதுக்கு முன்னாடி பாடின பாட்டெல்லாம் கர்ண கொடூரமா?//

அப்படி நான் சொன்னேனா? சூப்பருக்குக் கொஞ்சம் கம்மி. அவ்ளோதான்!
கொஞ்சம் கவனிச்சீங்கன்னா, தொண்டையிலிருந்து மூக்குக்கு குரல் ஊடுருவது தெரிய வரும்.
'ஸ,ப,ஸ' பயிற்சி பண்ணுங்க. சரியாயிரும்!

SurveySan said...

VSK,

///'ஸ,ப,ஸ' பயிற்சி பண்ணுங்க. சரியாயிரும்!//

ok. will check google what it means :)

danks!

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

எம்.எம்.அப்துல்லா said...

அட...இத்தனைநாளா நான் எப்பிடி இதை பார்க்காமவிட்டேன்!!

//////கூடுமான வரைக்கும் அந்த 'நேசல்' வாய்ஸைக் குறைக்கப் பாருங்க!
//

அதுவே ஒரு ஸ்டைலாதான் இருக்கு :)

SurveySan said...

அப்துல்லா, நன்றீஸ் :)

பெசொவி said...

இப்பொழுதுதான் கேட்டேன். மிக அருமையாக பாடி இருக்கிறீர்கள். நானும் பாடி அனுப்ப ஆசைதான். ஆனா, (இங்கே குணா கமல் மாதிரி பேசறதா நினைச்சிட்டு கேக்கணும்) நான் பாடி அதை மத்தவங்க கேட்டு, சர்வேசனோட பாட்டு இன்னும் சூப்பர்னு எங்க உங்க மார்கெட் எகிறிடப் போவுதோங்கற பொறாமையில பாட வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.

கிருஷ்ண ஜெயந்தியில ஏன் குழப்பம்னா, கோகுலாஷ்டமி ஆடி அமாவாசை கழிச்சு வர பவுர்ணமி கழிச்சு வர ஒரு அஷ்டமி அன்னிக்கு கொண்டாடுவாங்க. ஸ்ரீ ஜெயந்திங்கறது என்னன்னா, ஆவணி மாசத்துல வர ரோகினி நட்சத்திரம் அன்னிக்கு கொண்டாடுவாங்க.
(ஸ். ஸ் .ஸ்.ஸ்.........அப்பாடா, இப்பவே கண்ணக் கட்டுதே!)

SurveySan said...

latest singing here

http://surveysan.blogspot.com/2010/04/hosana.html

SurveySan said...

my latest music adventure

http://surveysan.blogspot.com/2010/10/blog-post_04.html

anybody home?