பாலாவின், நான் கடவுள், படப் பாடல்கள் வந்தாச்சு.
அதுக்குள்ள யூட்யூபில் எல்லா பாட்டையும் அமக்களமா போட்டுட்டாங்க ;)
இளையராஜா எல்லா பாடல்களிலும் மிரட்டியிருப்பாரென்று ரொம்ப ரொம்ப ரொம்ப எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
ஓம் ஷிவா ஓம்னு ஏதோ உர் சமுஸ்கிரத பாட்டு மாதிரி ஒண்ணு இருக்கு. அதுல ராசாவின் மிரட்டல் தெரியுது. ஆனா, பிதாமகனின் மிரட்டல் இருப்பதாய் தெரியல. பல தடவ கேட்டா இழுக்குமோ என்னமோ.
'ஒரு காற்றில்'னு பாட்டு, டிபிக்கல் ராஜா பாட்டு.
என்னை வெகுவா, கேட்டவுடன் இழுத்த பாட்டு, அம்மா பாட்டுதேன்.
அச்சாணி படத்தில், the one and only, ஜானகி மேடம் பாடிய, மாதா உன் கோயிலில் பாட்டின், ரீ-மிக்ஸ்.
ரீ-மிக்ஸ்னு அப்பட்டமா சொல்லமுடியாது, ஏன்னா, இசைக் கோர்வையை தாம் தூம்னு மாத்தாம, இன்னும் அம்சமா கொடுத்திருக்காரு ராஜா.
சாதனா சர்கம், சில வார்த்தைகளை கடிச்சு துப்பினாலும், அவங்க குரலில், அந்த பாட்டு நல்லாவே இருக்கு கேக்க.
நான் கடவுள் பாட்டை கேட்டதால், ஜானகியின் ஒரிஜினல் பாட்டை பலமுறை கேட்க்கும் ஈர்ப்பு அமைந்தது.
யம்மாடி, என்னமா பாடியிருக்காங்க. பாட்டுல வரும் சங்கதி எல்லாம், குளிர்ச்சியா இருக்கு.
இணையத்தில் மேய்ந்த போது, சௌம்யான்னு ஒரு பதிவர், ஒரிஜினலை பாடி வலையேத்தியிருக்காங்க. கேட்டுப் பாருங்க.
கேட்டாச்சுல்ல?
சற்றும் தாமதிக்காமல், நீங்களும், இந்தப் பாட்டை பாடி எனக்கு surveysan2005 at yahoo.comக்கு மடல் அனுப்புங்க ;)
பாடலின் வரிகள் இங்கே
ஜானகி மேடம் மாதிரி, ஆழ்ந்து அனுபவிச்சு பாடினீங்கன்னா, மாதாவே எறங்கி வந்து உங்களுக்கு வேண்டியதை கொடுப்பாங்க.
ஜமாய்ங்க!
பி.கு: இதற்கு முந்தைய 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' நேயர் விருப்பத்தில், கலக்கிய(?), நானு, VSK, தமிழ் பிரியனின் பாடல்கள் இங்கே.
Sunday, January 4, 2009
நான் கடவுள் - நேயர் விருப்பம்
Posted by
SurveySan
at
8:00 PM
4
comments
Labels: janaki achani maadha un kovilil
Subscribe to:
Posts (Atom)