வணக்கம். ரொம்ப நாளா தூங்க விட்டாச்சு, இந்த நேயர் விருப்பம் பக்கத்தை.
போன பதிவுல கேட்ட, 'உனக்கென இருப்பேன்..' பாட்டை யாரும் பாடி அனுப்பலை. நான் பாட முயற்சி பண்ணா, உயிர் போர மாதிரி தொண்டை வலிக்குது, கண்ண கட்டுது.
பிரமாதமான அந்த சங்கதி நிறைந்த பாட்டை பாடும்,வித்வான்கள் நம்ம மத்தியில் யாரும் இல்லாம போனது சோகம். :(
எல்லா நேயர் விருப்பத்துக்கும், பொங்கி எழும், டாக்டரும் இதுல கைய விரிச்சிட்டாரு.
சரின்னு, அடுத்த பாட்டை எடுத்துக்கிட்டு கோதால எறங்கிட்டேன்.
சினிமா தொடர் பதிவு போடும்போது, 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாட்டை பத்தி சொல்லியிருந்தேன். அப்பலருந்து, இந்த பாட்டு, உள்ள எக்கோ ஆகிட்டே இருந்துச்சு.
எவ்வளவு நாள்தான், உள்ள இருக்கர டி.எம்.எஸ்'ஸை அடக்கரது?
அதான், அவுத்து வுட்டுட்டேன்.
இனி, உங்க பாடு, டி.எம்.எஸ் பாடு.
கேட்டுட்டு, உயிர் பிழைச்சீங்கன்னா, வேர யாராச்சும், இத்த பாடி அனுப்புங்க.
லிரிக்ஸ் கீழ இருக்கு.
disclaimer: பாட்டை கேட்க ஆரம்பிக்கும் முன், வால்யூமை கொறச்சு வச்சுக்கங்க.
கொடுக்கல் வாங்கல் பாக்கி இருந்தா, முடிச்சுட்டு வந்து பாட்ட கேளுங்க. என்ன வேணா நடக்கலாம். நான் பொறுப்புலேது.
(if you cant see the widget and if you still want to hear the song, you can click here :))
|
VSK sings:
|
தமிழ் பிரியன் sings.
வரிகள்:
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
பேருக்கு பிள்ளை என்று
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யாரறிவார்
உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
என் வேரென நீ இருந்தாய்
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
ஒரிஜினல் இங்கே:
Get Your Own Hindi Songs Player at Music Plugin
நீங்களும் பாடி, mp3யை surveysan2005 at yahoo டாட் காம்'க்கு அனுப்புங்கோ!
Danks!
23 comments:
//இனி, உங்க பாடு, டி.எம்.எஸ் பாடு.
கேட்டுட்டு, உயிர் பிழைச்சீங்கன்னா, வேர யாராச்சும், இத்த பாடி அனுப்புங்க.///
அண்ணாச்சி கேட்டுட்டேன்! ::))
நீங்க பில்ட் அப் கொடுத்த மாதிரி அந்தளவுக்கு ஒண்ணும் டெரரா இல்லை! ரொம்ப சாப்ட்டாத்தான் இருக்கு - ஒரு வேளை நீங்க சாப்ட்வேர் ஆளா இருக்கும் பட்சத்தில் இப்படித்தான் இருக்குமோ ? ! :)))
அடுத்தடுத்து பாடல்களை பாடுங்கள் கேட்கின்றோம்! :))
நல்லா பாடி இருக்கீங்க, இசைக்கருவி ஏதும் இல்லாமல் பாடுவது கடினம்.
சர்வ்ஸ்
நல்லாதானே பாடி இருக்கீங்க அதுவும் தூங்கிட்டுருந்த இழையை தட்டி எழுப்பிட்டீங்க! நானும் முடிஞ்சா பாடி அனுப்பறேன்...!
aayilayan, shailaja, kayalvizhi,
Danks!
is it really OK? :)
VSK, engirundhaalum varavum ;)
எனக்கும் ரொம்பவே பிடிச்ச பாட்டு. பேருக்குப் பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு என்றுதான் வரிகள் என்ற நினைவு. சரியா என்று சொல்லுங்கள்
பெயரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல பிள்ளை, வெறும் பேச்சு பேசி மகிழ்ந்திருக்க சொந்தம் உண்டு என்றதாக நினைத்தேன்.
பத்மா, ஒரிஜினல் கேட்டுப் பாக்கறேன். இணையத்தில் கிடைச்ச லிரிக்ஸ் இது.
பாடினத பத்தி ஒண்ணும் சொல்லலியே? ;)
பத்மா, நீங்க சொன்னது ரைட்டு.
ஒரிஜினல் பாட்டு பதிவேத்திட்டேன்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ? கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ?
உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளி மயமானதடி!
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி!
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி
காலச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத்தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதிலென் விம்மல் தணியுமடி!
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்!
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ என்னைப் பேதமை செய்ததடி!
பேருக்கு பிள்ளையுண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு என்
தேவையை யாரறிவார் என்
தேவையை யாரறிவார் உன்னைப்போல் தெய்வமொன்றே அறியும்!
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என் கண்ணில் பாவை அன்றோ? கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ?
உ..ன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில்..
நானும் பாடி இருக்கேன்!
இந்தப் பாட்டு யார் பாடினாலும் அருமையாக இருக்கும்....நல்லாவே இருந்தது..
அன்புடன் அருணா
நல்லாவே பாடியிருக்கீங்க. குறிப்பா இந்த வரி
//என் வேரென நீ இருந்தாய்//.
அடுத்து தமிழ் பிரியன் எப்படி பாடியிருக்கிறார் என்று பார்க்க...இல்ல கேட்கப் போகிறேன்:)!
வர்ட்டா..:)?
நன்றாகப் பாடுகிறீர்கள் நண்பரே :)
தமிழ் பிரியன்,
நீங்களும் பாடினது மிகுந்த மகிழ்ச்சி.
அருணா,
///இந்தப் பாட்டு யார் பாடினாலும் அருமையாக இருக்கும்///
நன்றி.
நான் ஒண்ணும் பெரிய பாடகன் இல்லங்கறீங்க. :(
;)
ராமலக்ஷ்மி,
///நல்லாவே பாடியிருக்கீங்க. குறிப்பா இந்த வரி//
நன்னி! :)
ரிஷான்,
//நன்றாகப் பாடுகிறீர்கள் நண்பரே :)//
மிக்க நன்றி அன்பரே!
நாளைக்குள்ள வந்திடறேன் சாமி!
நல்லாத்தான்... ஆனா கணீர் கொஞ்சம் கம்மியா.. பாடியிருக்கீங்க!
:))
VSK, உங்க பாட்டையும் சேத்தாச்சு.
அமக்களமா பாடியிருக்கீங்க.
இவ்ளோ நாளா வராம இருந்தீங்களே, இடைப்பட்ட கேப்ல, கிளாஸுக்கு போய் மெருகேறியிருக்கர மாதிரி தெரியுதே :)
எங்க வூட்ல சொன்னது, "உன்னை விட, அவரு சூப்பரா சங்கதியெல்லாம் பாடறாரு" :)
ஜமாய்ச்சிட்டீங்க!
நன்றி!
ஷைலஜா, உங்களுது எங்கே?
விஎஸ்கே அசத்திட்டார்.
சர்வ்ஸ் வரேன் நானும்!
ரொம்ப நன்றி சர்வேசன்!
எல்லாம் வீட்டுல கொடுத்த உற்சாகம்தான் காரணம்!!
புது மைக் ஒண்னு வாங்கினேன் நேத்து!
Plantronics with USB... அது கூட காரணமா இருக்கலாம்!
:))
நன்றி ஷைலஜா! நீங்களும் வந்து அசத்துங்க சீக்கிரம்!:))
Post a Comment (no comment moderation)