Wednesday, March 28, 2007

8. விருப்பம் - நினைத்து நினைத்து பார்த்தால்

7ஜி ரெயின்போ காலனி படம் பாத்திருப்பீங்க. வித்யாசமான நல்ல படம்.
(ஒரு அரை மணி காட்சிகளைத் தவிர்த்திருந்தால் ரொம்ப நல்ல படமாயிருக்கும்).
யுவன் ஷங்கரின் பாடல்கள் செம கலக்கலா இருக்கும்.
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை (கார்த்திக்),
க‌னா காணும் கால‌ங்க‌ள் க‌ரைன்தோடும் நேர‌ங்க‌ள் (ஷ்ரெயா?)
இது என்ன மாயம் (பி.பி.எஸ்)
நினைத்து நினைத்து பார்த்தேன் (ஷ்ரேயா/கார்த்திக்)

இதில் குறிப்பாக,
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி அருகில் வருவேன்,
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
என்ற பாடல், மிகவும் அழகான, மனதை நெகிழ வைத்த பாடல்.
ஆரம்பத்தில் வரும் பியானோ பிட்டும், ஷ்ரெயாவின் குரலும், மதி மயக்கும் ரகம்.

ஆனா, படத்துல ஏனோ, ஷ்ரெயா பாடினத போடல. கார்த்திக் பாடினது தான் வரும்.

இந்த பாடலை அருமையா பாடி கவிதா (அணில் குட்டி அனிதா புகழ்) அனுப்பியிருக்காங்க.
இவரைத் தொடர்ந்து பலரும் பாடி அனுப்பினீங்கன்னா, வரிசையா போட்டுடலாம்.
ஆண்களும் பாடலாம்.

Start the Mujik!!!

1) Kavitha

kavitha_ninaithu.w...


2) Found this in Sowmyas blog.
3) by TC Ratnapuri - click here
4) ??
5) ??

-> Made in Pakistan - Survey - வோட்டியாச்சா?

-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))

Monday, March 12, 2007

சீனு

தூங்கிக் கொண்டிருந்த சீனுவை முகத்தில் தட்டி எழுப்பினாள் ஜானகி. சீனுவுக்கு ஏழு வயது. மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தூக்கம் முழுதும் கலையாது, அரை மயக்கத்தில் நடப்பது போல் நடந்து சென்றான்.
"சீக்கிரம், நேத்து மாதிரி லேட் பண்ணாம, மட மடன்னு கெளம்பு. ஸ்கூல் பஸ் போயிடுச்சுன்னா, நான் கொண்டு போய் விட முடியாது. எனக்கும் ஆபீஸுக்கு நேரமாவுது" - அலறினாள் ஜானகி அத்தை.

நேற்று ஜானகி, கோபத்தில் காதைத் திருகியது இன்னும் வலித்தது சீனுவுக்கு.
"அம்மாகிட்ட ஜானகி அத்தைய மாட்டி விடணும்" என்று மனதில் நினைத்துக் கொண்டே பள்ளிக்குக் கிளம்பினான் சீனு.

கசங்கிய சட்டை, பெரிய புத்தகப் பை, மதிய உணவுக்கு ஜானகி கட்டித் தந்த காஞ்சு போன ப்ரெட், இவற்றுடன் ஸ்கூல் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான் சீனு.

பஸ்ஸில் சீனுவை அனைவரும் திரும்பிப் பார்த்து முணு முணுத்தார்கள். எப்பொழுதும் சிடுசிடுவென இருக்கும் பஸ் ட்ரைவர், இன்று, "பை குடுப்பா. இங்க வந்து ஒக்காரு" என்று வாஞ்சயாக சீனுவின் கைபிடித்து அமர்த்திவிட்டார்.
பக்கத்து இருக்கையில் இருந்த ஐந்தாம் வகுப்பு கோமதி, "இந்தா சாப்பிடு" என்று தன்னிடமிரூந்த சாக்லேட் ஒன்றை நீட்டினாள். சீனு, மனதுக்குள் சிரித்தப்படி சந்தோஷமாய் சாக்லெட்டை வாங்கித் தின்றான்.
போன வாரம்தான், சீனுவின் வெள்ளை சட்டையில் ink அடித்து அவனை அழ வைத்தாள் இந்த கோமதி. அம்மாவிடம் கோமதியை மாட்டி விட்டது ஞாபகம் வந்தது சீனுவுக்கு.
கோமதி நீட்டிய சாக்லெட் வாங்கும்போது "கோமதி, good girl. அம்மாகிட்ட சொல்லணும்" என்று மனதுக்குள் சிரித்தான் சீனு.

லலிதா மிஸ், ரொம்ப strict. எல்லோரையும் ஓரு மிருகத்தை படமாக வரைந்து, அந்த மிருகத்தைப் பற்றி ஒரு வாக்கியம் சொல்ல வேண்டும் என்றும் home-work கொடுத்திருந்தார்.
நாய் என்று தலைப்பிட்டு ஏதோ கிறுக்கிக் கொடுத்தான் சீனு. லலிதா மிஸ் சீனுவை பார்த்து, "குட். சீனு. நாய் பத்தி ஏதாவது சொல்லு" என்று சீனுவிடம் கேட்க்க, சீனுவும், "நாய் லொள்னு குரைக்கும். நாய் பூனையை துரத்தும்" என்று சொன்னான்.
லலிதா மிஸ்ஸும் "வெரி குட் சீனு. Children clap your hands for சீனு" என்று சொல்ல எல்லா குழந்தைகளும், கை தட்டியது. சீனுவுக்கு பெருமை தாங்கவில்லை.
லலிதா மிஸ் good சொன்னார்கள் என்ற விஷயம் டாடி கிட்ட இன்னிக்கு சொன்னா, ரொம்ப நாளா கேட்க்கும் சைக்கிள் கட்டாயம் வாங்கிக் கொடுத்திடுவாங்க என்று மனதுக்குள் நினைத்து சிரித்தான்.
மதியம், காஞ்ச ப்ரெட்டை, சாப்பிடாமல் தூக்கிப் போட்டான்.

பள்ளி முடிந்து, மீண்டும் ஸ்கூல் பஸ். கைபிடித்து ஏற்றி விட்ட ட்ரைவர், இன்னொரு சாக்லெட்டுடன் கோமதி, கல கலவென சிரித்தபடி மற்ற பிள்ளைகளுடன் சீனுவும், இன்று நடந்த பள்ளி நிகழ்ச்சிகளை அம்மாவிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று அசை போட்டபடி வந்தான்.

அவன் இறங்கும் இடம் வந்ததும் குதித்திறங்கி கோமதிக்கு டாடா காட்டினான் சீனு.
தன் இல்லம் நோக்கி ஓடினான். டுர்ர்ர்ர்ர்ர் என்று கார் ஓட்டியபடி வீட்டை அடைந்தான்.

வழக்கமாக கேட்டின் அருகில் நின்று வரவேற்க்கும் அம்மாவை அங்கு காணவில்லை. முகம் சுருங்கியது சீனுவுக்கு. பள்ளீயில் இருந்து வந்ததும் அம்மாவை ஓடிச்சென்று கட்டி அணைத்து அன்று ந்டந்ததெல்லாம் ஒப்பிக்க வேண்டும் சீனுவுக்கு. அம்மாவும் ஆசையாக எல்லா கதையும் கேட்டுக் கொண்டே அவனுக்கு உடை மாற்றி, உணவு ஊட்டுவாள்.
"எங்க போனாங்க இந்த அம்மா" என்று யோசித்தபடி "அம்மா அம்மா" என்று கேட்டுக்கு வெளியில் இருந்து கத்தினான்.
வழக்கத்துக்கு மாறாக கேட் பூட்டியிருந்தது. முற்றம் குப்பையாக இரூந்தது.

இவன் அலறுவதைக் கேட்டு பக்கத்து வீட்டில் வேலை செய்யும் ஜமுனா பாட்டி வந்தாள்.
"டேய் சீனு, இங்க என்னடா பண்ற. போ உங்க அத்த தேடப் போறாங்க. லேட்டா போய் அடிவாங்காத. இனிமே நீ அங்க தான் போகணும். உங்க அம்மாவும், அப்பாவும் சாமி கிட்ட போயிட்டாங்க. சீக்கிரம் அத்த வீட்டுக்கு போ" என்றாள் ஜமுனா பாட்டி.

சீனுவுக்கு அழூகை வந்தது. போன வாரம், அம்மாவும், அப்பாவும் கடைக்கு போய் விட்டு வரும்போது லாரி மோதிவிட்டதால், மாலை போட்டு இருவரையும் முற்றத்தில் படுக்க வைத்திரூந்தது சீனுவுக்கு நினைவுக்கு வந்தது. அம்மாவையும் அப்பாவையும், வெளியே எடுத்துப் போனதும், சீனுவை இவன் மாமாவும் ஜானகி அத்தையும் அவர்கள் வீட்டுக்குக் கூட்டீச் சென்றார்கள். அம்மா எங்க என்போதெல்லாம் நாளைக்கு வருவாங்க என்று சொல்லியிருந்தார் மாமா.
ஜமுனா பாட்டி இனி அம்மா வரமாட்டாங்க என்றதும், அழூகையாய் வந்தது சீனுவுக்கு.
அழூதுகொண்டே பக்கத்துத் தெருவில் இருக்கும் ஜானகி அத்தை வீட்டுக்கு ஓடினான்.

"அத்த அம்மா எப்ப வருவாங்க" என்று அழுது கொண்டே கேட்டான்.

"பெரிய ரோதனடா உன்கிட்ட. இனி வரமாட்டாங்க போ. சாமி கிட்ட போயிட்டாங்க. நீ போய் home work எழூதி முடிச்சுட்டு தொட்டியில இருக்கர செடிக்கு தண்ணி ஊத்து போடா" என்றாள் ஜானகி.

அழுது கொண்டே homework முடித்து, செடிக்கு தண்ணி ஊற்றி, உறங்கப் போனான் சீனு.

அழுத களைப்பில் உடனே உறங்கிப் போனான்.

விழியில் இருந்து மட்டும் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

------------ ----------------- ---------------- ---------------
பி.கு: ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் சிறுகதையின் கருவை எடுத்து, லேசாக மாற்றி எழுதியிருக்கிறேன். யாருக்காவது தெரியுமா? எந்த எழுத்தாளர், என்ன கதைன்னு?

நல்லா இருந்ததா? மினி-கதைப் போட்டிக்காக எழுதியது.

Sunday, March 11, 2007

கதைப் போட்டிக்கான முன்னோட்டம்

மக்கள்ஸ் கிட்ட அடுத்த போட்டி என்ன வைக்கலாம்னு கேட்டதுக்கு சிறுகதை போட்டிக்குத்தான் அதிக வோட்டு விழுந்திருக்கு.

சோ, கூடிய விரைவில் ஒரு சிறுகதை போட்டி வச்சிடலாம்.

அதுக்கு முன்னாடி, ஒரு ட்ரையல் பேஸிஸ்ல, இந்தப் பதிவுல ஒரு மினி‍‍‍‍-கதைய‌ எல்லாரையும் எழுத சொல்லலாம்னு ஐடியா.

சிறுகதைப் போட்டிக்கு, தலைப்பு மட்டும் குடுக்காம, வித்யாசமா வேற ஏதாவது கொடுக்கலாம்னு இருக்கேன் (உ.ம் சிச்சுவேஷன்). (ஐடியாஸ் வரவேற்க்கப்படுகின்றன).

எனிவே, இப்ப மினி‍கதை எழுத ரெடியா?

ரூல்ஸ்:

1) mini-கதைல காலைல யாராவது தூங்கி எழுந்துக்கர மாதிரி ஒரு சீன் இருக்கணும். காலைல வீட்ட விட்டு வெளியில போகிற மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். மதியானம் லஞ்ச் சாப்பிடர மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். சாயங்காலம் வீட்டுக்கு திரும்பி வர மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். ராத்திரி தூக்க‌ப் போற‌ மாதிரியும் ஒரு சீன் இருக்க‌ணும்.

2) கதை குட்டியா, ஒரு பக்கத்துக்குள்ள நச்சுன்னு இருக்கணும். தோராயமா ஒரு 100 வரிகள்னு வச்சுக்கங்க.

3) கதைய உங்க பதிவுல எழுதி உரல் பின்னூட்டலாம், இல்லன்னா, பின்னூட்டத்துலயே கூட கதை எழுதலாம். நான் காபி/பேஸ்ட் செஞ்சு என் பதிவுல வரிசை படுத்துவேன்.

4) ப‌ரிசெல்லாம் கிடையாது (ம‌ன‌சு மாறினாலும் மாறும். பாப்போம் :) )

5) 10 க‌தைக்கு மேல‌ தேறினா, ஒரு ச‌ர்வே போட்டு சிறந்த‌ க‌தைய‌ ம‌க்க‌ள்ஸ‌ விட்டு பிக் ப‌ண்ண‌ சொல்லுவேன். :)

have fun! Write and send your mini-stories right away. thanks!

கடைசி தேதி - 31-March-07.

பின்னூட்டத்திலேயே போடுங்க. போட முடியாதவங்க, surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு கதையை அனுப்பலாம்.
முதல் கதையை அனுப்பிய ஷைலஜாவுக்கு நன்றி. கத சூப்பர்.

===================================================
1.ஆபரேஷன் ஆரம்பம். - by ஷைலஜா
===================================================
காலையில் எழுந்திருக்கும்போதே வசந்தாவிற்கு வாய் முணுமுணுத்தபடியே இருந்தது."முருகா! இந்த ஆபரேஷன் நல்லா முடியணுமே நீதான் அருள் செய்யணும் உன்னைத்தான் நம்பி இருக்கேன்"

கண் லேசாய் கலங்கவேறு ஆரம்பிக்கவும் அதை கவனித்த பத்ரிநாத்,"என்ன வசந்தா! நீயே இப்படி துவண்டுபோனா பாலாஜி என்ன
பண்ணுவான் பாவம்" என்று அவள் அருகில்வந்து மென்மையான குரலில் கடிந்து கொண்டார்.

பாலாஜி ,"அப்பா ரெடியா?" என்றுகேட்டான் மாடியில்தன் அறையினின்றும் கீழே படிகளில் இறங்கி வந்தபடி.
இருபத்திஆறுவயது இளம்புயல். அசப்பில் நடிகர் சூர்யாவைபோல இருப்பான்.

பத்ரிநாத் தலையாட்டியபடி அவனோடு வெளியே நடந்தார்.

"நா நானும் ஆஸ்பித்திரிக்கு வரேனே?" என்று சொல்ல வந்த வசந்தா சட்டென வாயை இறுகமூடிக்கொண்டாள்.

நேற்றே அப்பாவும் மகனும் அவளை அங்கெல்லாம் வரக்கூடாது அனாவசியமாய் மிரளத் தேவைஇல்லை என அடக்கிவிட்டார்கள்.

மதியம் சாப்பிட வந்தவரிடம் வசந்தா கேட்டாள் கவலையுடன், "என்னங்க பா..பா..பாலாஜீ எப்படி இருக்கான்?"

"அதெல்லாம் ஆபரேஷனுக்குப் பிறகுதான் தெரியும் வசந்தா.. சரிசரி சாப்பாடு போடு நான் மறுபடிபோகணும்"

மாலை மறுபடி வீடுவந்தும் பத்ரிநாத் வாயே திறக்கவில்லை.

"என்னங்க பெரிய ஆபரேஷனா?"

"ஆமா.. மனசை திடப்படுத்திக்க வசந்தா..நா..நான் அங்கே ஆஸ்பித்ரிலேயே இருக்கேனே எனக்கு எப்படி இருக்கும் சொல்லு?"என்றவர் தலையை தொங்கப்போட்டபடி வெளியே போனார்.

வசந்தா மௌனமாய் அப்படியே நின்றுவிட்டாள்.

இரவு மணி பத்துமுப்பதுக்கு பத்ரிநாத் வீடுதிரும்பினார் எதுவும் சொல்லாமல் நேரே தூங்கப்போனவரிடம் வசந்தா," என்னங்க..ஆபரேஷன் சக்ஸசா?" என்று கேட்டாள்.

"ஆமா வசந்தா! நம்ம பையன் டாக்டர் ஆனதும் செய்யும் முதல் ஆபரேஷன்னு நானும் நீயும் அது நல்லபடியா முடியணும்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டது வீண்போகல..ஆபரேஷன் முடிஞ்சதும் எல்லா டாக்டருங்களும் நம்ம மகனை பாராட்டினதை நான் கண்ணால
பாக்கத்தானே அங்கெயே போய் உக்காந்திருந்தேன்?ஆப்ரேஷன் சக்ஸஸ்! அதை பாலாஜியே இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்து உன்கிட்ட விவரமா சொல்வான்"
============================================
முற்றும்.
============================================


===================================================
2. சீனு - by சர்வேசன்
===================================================


===================================================
3. மாறாதது - by RamachandranUsha
===================================================
இங்கே க்ளிக்கி படிக்கவும்
===================================================


===================================================
4.தவிப்பு - by Shakthi
===================================================
ஒரு நாள் அவனை பார்க்கவில்லை அதனால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் மீனா.
தன்னை எப்போதும் கவனிக்கும் அந்த கண்கள்,பார்த்தும் பார்க்காதது மாதிரி அவனின் நடிப்பு,பாசமும் அன்பும் நிறைந்த அவனது குனம்.
மீனாவின் மனம் ஒரு நிலையில் இல்லை.எப்போது விடியும் என்று கடிகாரத்தையே பார்தபடி இருந்தாள்.
பொழுதும் விடிந்தது.
ஓடி வந்து வாசலில் நின்றாள்.அவன் எப்போதும் அந்த சமயத்தில் இவளுக்காக காத்திருப்பான்.இன்று அவன் அங்கு இல்லை.`ஏண்டீ என்ன பண்ற அங்க` என்று அம்மாவின் குரல் கேட்டதும் உள்ளே ஓடினாள்.
மதியம் சாபிடும் போது அவளின் தோழி வந்தாள்.அவசர அவசரமாக சாப்பிட்டு தன் தோழியிடம் விஷயத்தை கூறினாள்.`நீ ஒன்னும் கவலைப்படாதே நான் ஏதாவது செய்ய முடியுமானு பாக்குரேன்`என்று கூறி விடைப்பெற்றாள்.அரை மனதுடன் அவளை வழி அனுப்பிவைத்தாள்.இரவும் வந்தது.. படுக்கைக்கும் போகமனமிலாமல் அவள் தோழியை மனமார சபித்துக்கொண்டிருந்தாள்.`வரேனாளே ஆளயே கானமே` மனம் பதரியது.
திடீரென அழைப்பு மனி சத்தம் கேட்டு ஓடினாள்.
ஆம்.
தன் தோழி வந்திருந்தாள்.அவளை கண்டதும் ஒரே சந்தோஷம்.
அவனும் இருந்தான் அவளுடன்.
தன் தோழி பிடியிலிருந்து ஓட பார்த அவனை நில்லுடா ராமு..`எங்கே போய்ட` என்று செல்லமாக கண்டிதாள்.
கட்டிபிடிதுக்கொண்டாள்.
தன் செல்ல நாய்க்குட்டி கிடைத்த சந்தோஷத்தில் நிம்மதியாக படுக்கைக்கு சென்றாள்.
===================================================



===================================================
5. போட்டிக்கதை - by பினாத்தல் சுரேஷ்
===================================================
இங்கே க்ளிக்கி படிக்கவும்
===================================================




===================================================
6. இருபத்தியெட்டாவது நட்சத்திரம்! by நானானி ( rules not followed fully?? :) )
===================================================



===================================================
7. ?????? by ??
===================================================

Saturday, March 10, 2007

7. நேயர் விருப்பம் - வாழ மீன் recipe

நண்பர்காள்,

வாழ மீன் (வாள? belt fish) வாங்கி வச்சிருக்கோம்.

அதை எப்படி சமைத்தால் நன்னாருக்கும் என்று பின்னூடுங்களேன், ப்ளீஸ்.

போத், ப்ரை & க்ரேவி recipe's அனுப்புங்களேன்.

சும்மா நச்சுனு இருக்கோணும். :)

நன்றீஸ்,
சர்வே-சன்

Saturday, March 3, 2007

6. விருப்பங்கள் - நான் நடித்த படித்தலிருந்து ஒரு பாடல் & more...

வாங்க வாங்க!

இந்தப் பதிவில் மூன்று விருப்பங்கள் கேட்க்க உள்ளேன். இதற்கு முன் கேட்ட விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனாலும், இன்னும் பலரும் பாட முன்வந்தால் சுவாரஸ்யம் கூடும்.

நல்லா SPB மாதிரி பாடணும்னு அவசியம் கிடையாது. யார் வேணா பாடலாம், கோதால எறங்கினாதான் எவ்ளோ ஜாலியான விஷயம் பாடரதுன்னு தெரியும்.

சோ, என்டர் த கோதா.

சரி விருப்பத்துக்கு வருவோமா?

1) என்னடா, நான் நடித்த படம்னு சொல்லிட்டேனேனு பாக்கறீங்களா? ஆமாங்க, நானும் சினிமால நடிச்சு அப்பறம்தான் சர்வே எடுக்க வந்தேன்.

சின்ன வயசுல, இஸ்கூல் போகும் நாட்களில், ஒரு வேன்ல ஒக்கார வெச்சு எங்கியோ கூட்டிட்டு போனாங்க. அங்க நில்லு, இப்படி ஒக்காரு, இங்க நடந்து வா, மேல பாரு, கண்ணாடி போட்டுக்கோன்னு சொல்லி 'நடிக்க' வச்சாங்க.

ஒரு மாசம் போச்சு ஷூட்டிங். ரெண்டு பாட்டுல கூட ஆக்ட் கொடுத்திருக்கேன்.

ஹைலைட் என்னன்னா, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிதான் ஹீரோ படத்துக்கு.
இன்னா ஸ்டைலு, இன்னா கரிஸ்மா, இன்னா ஸ்மார்ட்டு - சூப்பர்ங்க ரஜினி.
படம் முழுக்க ஒரு வைட் பைஜாமால நச்சுனு இருப்பாரு.
படத்துக்கு இசை நம்ம இசைஞானி இளையராஜா சார். தூள் டக்கர் பாடல்கள் படத்துல.

அதுலயும், நான் விருப்பமா கேக்க போற பாட்டு இருக்கே, பலரும், அவர்கள் விரும்பிய டாப்-10 பாடல்களில், இதை கண்டிப்பா வச்சிருப்பாங்க. கேட்டாலே கண்ணுல தண்ணி வரும்.
(அதிலும், என் ஏக்டிங்கும் பாத்தா, தேம்பி தேம்பி அழுக வரும்).

என்ன படமா? இன்னுமா கண்டுபிடிக்கல? படம் பேரு, அன்புள்ள ரஜினிகாந்த்.
எந்த பாட்டா? லதா ரஜினி பாடிய, கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே என்ற பாடல்.

நான் என்ன கேரக்டரா வரேனா? அந்த படத்துல ஒரு 100 பசங்க, கண்ணு தெரியாத மாதிரியும், ஊனமுற்ற மாதிரியும் வருமே தெரியுமா?

அந்த நூத்துல ஒண்ணுதேன் நானு! :))))))))))

பாடல் வரிகள் இங்கே.

பாடலின் ஒலி இங்கே.

எல்லாரும் பாடி அனுப்புங்க. இதை பாடுதலே ஒரு சுகமான அனுபவமா இருக்கும். முடிந்தால், முழுப்பாடலும் பாடி அனுப்புங்க. (ஆண்களும் பாடலாம்). நன்றி!

****************
a) Found this in Sowmyas blog - Kadavul Ullame
****************

2) வல்லிசிம்ஹனின் விருப்பம், தூக்கு தூக்கி படத்துலேருந்து, 'ஏறாத மலைதனிலே' என்ற சூப்பர் நாட்டுப்புற ஸ்டைல் பாடல்.
இந்த பாடலின் வரிகள் இங்கே
பாடலின் ஒலி வடிவம் கிடைக்கல. தெரிஞ்சவங்க பின்னூட்டம் போடுங்க.
(கான கருங்குயிலே கச்சேரி வைக்கப் போறேன் என்ற ஜேசுதாஸ் பாடல் ஒன்று, இந்த பழைய பாடலிலிருந்துதான் lift ஆயிருக்குன்னு நெனனக்கறேன் :) ).

ஜாலியா பாடி, இதையும் அனுப்புங்க மக்கள்ஸ். நன்றி!
****************
a) 'ஏறாத மலைதனிலே' - by VSK

SK_EERAdha.wav


b) ஏறாத மலைதனிலே - by ஜீவா
Eraatha malaithani...


****************


3) Jeeves'ன் விருப்பமான கன்னடப் பாட்டு. இதே பாட்டு தமிழ்லயும் இருக்கு. இளையராஜாவின் இசையில் SPBன் சூப்பர் பாட்டு அது. கன்னடப் பாட்ட இங்க கேளுங்க. அது எந்த தமிழ்பாட்டுன்னு கண்டுக்கினு, பாடி அதையும் அனுப்புங்க. நன்றி!
(பி.கு: jeeves, உங்க பதிவுல வந்த உடனே, சூர்யா FM அலருது - அத defaultஆ பாடற மாதிரி வெக்காதீங்க சாரே :) ).

பாட்டுக்கு பாட்டு, தேன்கூடு சுடர் மாதிரி ஸ்லோவா நவுருது. எல்லாரும் கோதால குதிங்க மக்கள்ஸ்.

வெட்கம் தவிர்! :)

(பி.கு: வேலை ஜாஸ்தியாயிடுச்சு + ட்ராவலும் ஜாஸ்தியாயிடுச்சு - சோ, பாடல்களை ஒரு esnips மாதிரி public websiteல் ஒரு public folder க்ரியேட்டி, நீங்களே ஏத்திடுங்க. URL பின்னூட்டிடுங்க. நேரம் கிடைக்கும்போது, பதிவில் நான் சேர்த்துவிடுகிறேன். பின்னூட்டம் உடனுக்குடன் தெரிய மாடரேஷன் தூக்கிட்டேன் (வாழ்க டமில்மணம்), on a trial basis :) ).

Thursday, March 1, 2007

சுடர் அணைந்ததா?

----------------------------
latest update:
இப்ப thenkoodu.com வேலை செய்யுது. naming server பிரச்சனையாகத்தான் இருக்க வேண்டும் :)))))))
----------------------------
thenkoodu.com வேலை செய்யவில்லயே. temporary-outageஆ, இல்லை கவனிப்பார் இல்லாததனால், எழுப்ப ஆளில்லயா? (naming server பிரச்சனை போல்தான் தெரிகிறது. தானாய் சரியாகலாம் ).

சில மாதங்கள் தடையில்லாமல் இயங்கும் என்றல்லவா நினைத்திருந்தேன். வேதனை.

தேன்கூட்டை நிர்வகிக்க உதவி தேவைப்பட்டால் அணுகவும்.
என்னைப்போலவே பலரும் volunteer ஆக தயாராயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தேன்கூடு குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் சில நாட்களில் இது பற்றி தெரியப் படுத்தலாம். அவர்களுக்கு உபயோகம் இருக்கும் வகையில் ஏதாவது செய்ய அனைவரும் முயற்சிக்கலாம்.

மேல் விவரங்கள் அறிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.

தவறிருந்தால் மன்னிக்கவும்.

வேதனையுடன்,
சர்வே-சன்

பி.கு: surveysan.blogspot.com ம் temporary-outageல் இருக்கிறது. புதுமனை புகுவிழா நடத்தியதும் படுத்துக் கொண்டது.
தளம் இயங்கும். ஆனால் புதிய பதிவுகள் ஏற்ற முடியாது. கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருங்க. கூகிள் சாமிகிட்ட வரம் கேட்டிருக்கிறேன். என்ன சொல்துன்னு பாக்கலாம்.