Sunday, March 11, 2007

கதைப் போட்டிக்கான முன்னோட்டம்

மக்கள்ஸ் கிட்ட அடுத்த போட்டி என்ன வைக்கலாம்னு கேட்டதுக்கு சிறுகதை போட்டிக்குத்தான் அதிக வோட்டு விழுந்திருக்கு.

சோ, கூடிய விரைவில் ஒரு சிறுகதை போட்டி வச்சிடலாம்.

அதுக்கு முன்னாடி, ஒரு ட்ரையல் பேஸிஸ்ல, இந்தப் பதிவுல ஒரு மினி‍‍‍‍-கதைய‌ எல்லாரையும் எழுத சொல்லலாம்னு ஐடியா.

சிறுகதைப் போட்டிக்கு, தலைப்பு மட்டும் குடுக்காம, வித்யாசமா வேற ஏதாவது கொடுக்கலாம்னு இருக்கேன் (உ.ம் சிச்சுவேஷன்). (ஐடியாஸ் வரவேற்க்கப்படுகின்றன).

எனிவே, இப்ப மினி‍கதை எழுத ரெடியா?

ரூல்ஸ்:

1) mini-கதைல காலைல யாராவது தூங்கி எழுந்துக்கர மாதிரி ஒரு சீன் இருக்கணும். காலைல வீட்ட விட்டு வெளியில போகிற மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். மதியானம் லஞ்ச் சாப்பிடர மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். சாயங்காலம் வீட்டுக்கு திரும்பி வர மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். ராத்திரி தூக்க‌ப் போற‌ மாதிரியும் ஒரு சீன் இருக்க‌ணும்.

2) கதை குட்டியா, ஒரு பக்கத்துக்குள்ள நச்சுன்னு இருக்கணும். தோராயமா ஒரு 100 வரிகள்னு வச்சுக்கங்க.

3) கதைய உங்க பதிவுல எழுதி உரல் பின்னூட்டலாம், இல்லன்னா, பின்னூட்டத்துலயே கூட கதை எழுதலாம். நான் காபி/பேஸ்ட் செஞ்சு என் பதிவுல வரிசை படுத்துவேன்.

4) ப‌ரிசெல்லாம் கிடையாது (ம‌ன‌சு மாறினாலும் மாறும். பாப்போம் :) )

5) 10 க‌தைக்கு மேல‌ தேறினா, ஒரு ச‌ர்வே போட்டு சிறந்த‌ க‌தைய‌ ம‌க்க‌ள்ஸ‌ விட்டு பிக் ப‌ண்ண‌ சொல்லுவேன். :)

have fun! Write and send your mini-stories right away. thanks!

கடைசி தேதி - 31-March-07.

பின்னூட்டத்திலேயே போடுங்க. போட முடியாதவங்க, surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு கதையை அனுப்பலாம்.
முதல் கதையை அனுப்பிய ஷைலஜாவுக்கு நன்றி. கத சூப்பர்.

===================================================
1.ஆபரேஷன் ஆரம்பம். - by ஷைலஜா
===================================================
காலையில் எழுந்திருக்கும்போதே வசந்தாவிற்கு வாய் முணுமுணுத்தபடியே இருந்தது."முருகா! இந்த ஆபரேஷன் நல்லா முடியணுமே நீதான் அருள் செய்யணும் உன்னைத்தான் நம்பி இருக்கேன்"

கண் லேசாய் கலங்கவேறு ஆரம்பிக்கவும் அதை கவனித்த பத்ரிநாத்,"என்ன வசந்தா! நீயே இப்படி துவண்டுபோனா பாலாஜி என்ன
பண்ணுவான் பாவம்" என்று அவள் அருகில்வந்து மென்மையான குரலில் கடிந்து கொண்டார்.

பாலாஜி ,"அப்பா ரெடியா?" என்றுகேட்டான் மாடியில்தன் அறையினின்றும் கீழே படிகளில் இறங்கி வந்தபடி.
இருபத்திஆறுவயது இளம்புயல். அசப்பில் நடிகர் சூர்யாவைபோல இருப்பான்.

பத்ரிநாத் தலையாட்டியபடி அவனோடு வெளியே நடந்தார்.

"நா நானும் ஆஸ்பித்திரிக்கு வரேனே?" என்று சொல்ல வந்த வசந்தா சட்டென வாயை இறுகமூடிக்கொண்டாள்.

நேற்றே அப்பாவும் மகனும் அவளை அங்கெல்லாம் வரக்கூடாது அனாவசியமாய் மிரளத் தேவைஇல்லை என அடக்கிவிட்டார்கள்.

மதியம் சாப்பிட வந்தவரிடம் வசந்தா கேட்டாள் கவலையுடன், "என்னங்க பா..பா..பாலாஜீ எப்படி இருக்கான்?"

"அதெல்லாம் ஆபரேஷனுக்குப் பிறகுதான் தெரியும் வசந்தா.. சரிசரி சாப்பாடு போடு நான் மறுபடிபோகணும்"

மாலை மறுபடி வீடுவந்தும் பத்ரிநாத் வாயே திறக்கவில்லை.

"என்னங்க பெரிய ஆபரேஷனா?"

"ஆமா.. மனசை திடப்படுத்திக்க வசந்தா..நா..நான் அங்கே ஆஸ்பித்ரிலேயே இருக்கேனே எனக்கு எப்படி இருக்கும் சொல்லு?"என்றவர் தலையை தொங்கப்போட்டபடி வெளியே போனார்.

வசந்தா மௌனமாய் அப்படியே நின்றுவிட்டாள்.

இரவு மணி பத்துமுப்பதுக்கு பத்ரிநாத் வீடுதிரும்பினார் எதுவும் சொல்லாமல் நேரே தூங்கப்போனவரிடம் வசந்தா," என்னங்க..ஆபரேஷன் சக்ஸசா?" என்று கேட்டாள்.

"ஆமா வசந்தா! நம்ம பையன் டாக்டர் ஆனதும் செய்யும் முதல் ஆபரேஷன்னு நானும் நீயும் அது நல்லபடியா முடியணும்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டது வீண்போகல..ஆபரேஷன் முடிஞ்சதும் எல்லா டாக்டருங்களும் நம்ம மகனை பாராட்டினதை நான் கண்ணால
பாக்கத்தானே அங்கெயே போய் உக்காந்திருந்தேன்?ஆப்ரேஷன் சக்ஸஸ்! அதை பாலாஜியே இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்து உன்கிட்ட விவரமா சொல்வான்"
============================================
முற்றும்.
============================================


===================================================
2. சீனு - by சர்வேசன்
===================================================


===================================================
3. மாறாதது - by RamachandranUsha
===================================================
இங்கே க்ளிக்கி படிக்கவும்
===================================================


===================================================
4.தவிப்பு - by Shakthi
===================================================
ஒரு நாள் அவனை பார்க்கவில்லை அதனால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் மீனா.
தன்னை எப்போதும் கவனிக்கும் அந்த கண்கள்,பார்த்தும் பார்க்காதது மாதிரி அவனின் நடிப்பு,பாசமும் அன்பும் நிறைந்த அவனது குனம்.
மீனாவின் மனம் ஒரு நிலையில் இல்லை.எப்போது விடியும் என்று கடிகாரத்தையே பார்தபடி இருந்தாள்.
பொழுதும் விடிந்தது.
ஓடி வந்து வாசலில் நின்றாள்.அவன் எப்போதும் அந்த சமயத்தில் இவளுக்காக காத்திருப்பான்.இன்று அவன் அங்கு இல்லை.`ஏண்டீ என்ன பண்ற அங்க` என்று அம்மாவின் குரல் கேட்டதும் உள்ளே ஓடினாள்.
மதியம் சாபிடும் போது அவளின் தோழி வந்தாள்.அவசர அவசரமாக சாப்பிட்டு தன் தோழியிடம் விஷயத்தை கூறினாள்.`நீ ஒன்னும் கவலைப்படாதே நான் ஏதாவது செய்ய முடியுமானு பாக்குரேன்`என்று கூறி விடைப்பெற்றாள்.அரை மனதுடன் அவளை வழி அனுப்பிவைத்தாள்.இரவும் வந்தது.. படுக்கைக்கும் போகமனமிலாமல் அவள் தோழியை மனமார சபித்துக்கொண்டிருந்தாள்.`வரேனாளே ஆளயே கானமே` மனம் பதரியது.
திடீரென அழைப்பு மனி சத்தம் கேட்டு ஓடினாள்.
ஆம்.
தன் தோழி வந்திருந்தாள்.அவளை கண்டதும் ஒரே சந்தோஷம்.
அவனும் இருந்தான் அவளுடன்.
தன் தோழி பிடியிலிருந்து ஓட பார்த அவனை நில்லுடா ராமு..`எங்கே போய்ட` என்று செல்லமாக கண்டிதாள்.
கட்டிபிடிதுக்கொண்டாள்.
தன் செல்ல நாய்க்குட்டி கிடைத்த சந்தோஷத்தில் நிம்மதியாக படுக்கைக்கு சென்றாள்.
======================================================================================================
5. போட்டிக்கதை - by பினாத்தல் சுரேஷ்
===================================================
இங்கே க்ளிக்கி படிக்கவும்
===================================================
===================================================
6. இருபத்தியெட்டாவது நட்சத்திரம்! by நானானி ( rules not followed fully?? :) )
======================================================================================================
7. ?????? by ??
===================================================

27 comments:

ஜி - Z said...

கடைசி நாள் சொல்லவே இல்லையே???

வெட்டிப்பயல் said...

அதானே!!! கடைசி நாள் சொல்லலைனா எப்படி???

ஜி இருக்கும் போது களம் இறங்கவே பயமா இருக்கு...

வெட்டிப்பயல் said...

தலைவா,
பாப் அப் விண்டோல கமெண்ட் வரது வேணாமே... மாத்திடுங்களேன்.

Shakthi said...

கமென்ட்ஸ் அனுப்ர இதுலயே கதைய அனுப்பலாமா?

வல்லிசிம்ஹன் said...

என்னது இது.காஅர்த்தால எழுந்து ஒரு வரி
ஆபீஸ் போகணும் அடுத்தவரி
லன்சுக்கு வரணும் முணாவது வரி.
காப்பி அடுத்த வரி.
டிபன் உண்டா சரி நாலாவது வரி.
அப்புறம் ராத்திரி சாப்பாடு, தூக்கமா. ஓக்கே. 6 வரிக் கதை எழுதியாச்சு. எப்ப அனுப்பணும்?:-)

ஷைலஜா said...

vallimmaa! pottu thaakkitinga!
surves!i have sent my story to yr email, plz check it.
shylaja

SurveySan said...

ஜி, வெட்டி, கடைசி தேதி - மார்ச் 31 2007.

வெட்டி, பாப் அப் தூக்கிட்டேன்.

ஷக்தி, கதைய க்மெண்டாவே போடலாம். இல்லன்னா ஈமெய்யில் அனுப்ப்பலாம்.

வல்லிசிம்ஹன், ஆறு வரி ரொம்ப சிக்க்க்னம், கொஞ்சம் பெருசா எழுதி அனுப்புங்க :)

ஷைலஜா, கதைக்கு நன்றி. போட்டாச்சு.

நான் கூட ஒரு கத எழுதலாம்னு இருக்கேன் (சுட்டது தான்.) :)

SurveySan said...

என்(? சுட்ட) கதைய சேத்துட்டேன் :)

SurveySan said...

எனி விமர்சனம் பார் மை கதை?

Anonymous said...

அனுப்பியிருக்கேன். வந்ததான்னு பாருங்க
-ramachandranusha

SurveySan said...

usha, உங்க ஈமெயிலுக்கு ரிப்ளை பண்ணிருக்கேன். attachment படிக்க முடீல :(

ramachandranusha said...

மாறாதது


காலையில் எழுந்ததும், மெயில் பாக்சை திறந்த அசோக்கிற்கு ஆச்சரியங்கள் பொங்கி வழிந்தன. அவன் எழுதிய கவிதைக்கு தமிழ் இணைய உலக பெருசுகள் பலரிடமிருந்து பாராட்டு மடல்கள், பின்னுட்டங்கள். வலைப்பதிவு ஆரம்பித்த சில வாரங்களிலேயே
இத்தகைய வரவேற்பா?

பிள்ளைகள் இரண்டும் அப்பா டாட்டா என்றுச் சொல்லி விட்டு பள்ளிக்கூடம் போவதை கண்கள் கவனித்தாலும், மனம் கவிதைக்குக் கிடைத்த பாராட்டுகளில் ஆழ்ந்திருந்தது. படிக்க ஆரம்பித்தவன் காதில், மனைவி கலா கத்துவது கேட்டது.

"மணி பார்த்தீங்களா? ஏழே கால் ஆச்சு. ஆபிஸ் வண்டி எட்டு மணிக்கு வந்துடும். அது என்ன எழவோ பொழுதுக்கும் கம்ப்யூட்டரைக்
கட்டிக்கிட்டு அழ வேண்டியது. வீட்டுல பொண்டாட்டி, புள்ளைங்க இருக்கிற நெனப்பே இல்லே" அவள் கத்துவதில், மணி ஏழே கால் என்பது மட்டும் காதில் விழுந்து, கணிணியை அணைத்துவிட்டு, குளிக்க ஓடினான்.

"கலா, பொட்டு கடலை சட்னியா? சாம்பார் இல்லையா? இப்ப எல்லாம் வீட்டு வேலை செய்யவே உனக்கு அக்கறை இல்லே" இட்லியை வேண்டாவெறுப்புடன் வாயில் போட்டுக் கொண்டே முணக்கினான்.

"இன்னைக்கு ஒரு நாளு அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. அல் மதினா சூப்பர் மார்கெட் பில்டிங்ல, இன்னைக்கு வெளக்கு பூஜை. எனக்கு
நேரமாகுது. ஸ்பேர் கீல பூட்டிக்கிட்டு கெளம்புங்க. நா குளிக்க போறேன்" என்றுச் சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள் கலா.

அலுவலகத்தில் வேலை ஓடினாலும், அவ்வப்பொழுது பின்னுட்டங்களைப் படிப்பதிலும், தனிமடல் பாராட்டுகளை கண் பார்த்துக் கொண்டு இருந்தது. கூட பணியாற்றும் இரண்டு தமிழர்களிடம் தன் பெருமையை, மெல்ல சொல்லிக் கொண்டாலும், அவர்கள் வெகு சாதாரணமாய் அப்படியா பாராட்டுகள் என்றதும் அவனுக்கு சப் என்றுப் போய்விட்டது.

வீட்டுக்கு சென்று கலாவிடமாவது படித்துக் காட்ட வேண்டும் என்று மதிய உணவு வேளைக்கு ஆவலுடன் காத்திருந்தான். போன் அடித்தது. கலா!

" உங்களுக்கு சாப்பாடு மேஜைல வெச்சிருக்கேன். பூஜையில பிரசாதம்னு நிறைய குடுத்துவிட்டிருக்காங்க" என்று கலா ஆரம்பித்ததும், அசோக் தான் அலுவலகத்தில் இருப்பதை நினைவுக்குக் கொண்டு வந்து, குரலை தாழ்த்திக் கொண்டு,

"கலா, இது நல்லா இல்லே சொல்லிட்டேன். புருஷனுக்கு சாப்பாடு போடக்கூட உனக்கு நேரமில்லாம போச்சா? அப்படி என்ன
அரட்டை அங்க? நான் இன்னும் அரை மணில வீட்டுல இருப்பேன். நா வரத்துக்குல நீ வீட்டுல இருக்கணும்" என்றுச் சொல்லி போனை கட் செய்தான்.

எதுவும் பேசாமல் , மனைவி போடுவதைச் சாப்பிட்டான். கலா செய்த குழம்பு, பொரியல் அல்லாமல் புளியோதரை, சக்கரை பொங்கல், வடை என்று சாப்பாடு வயிறு நிரம்பியதும், "நீ சாப்பிட்டியா?" என்று மெல்ல கேட்டான். உம் உம் என்று பதில் வந்தது.

இருக்கும் பத்து நிமிஷ அவகாசத்தில் கணிணியை உசுப்பியதும், மேலும் பல பின்னுட்டங்கள். ஒவ்வொன்றாய் படித்து அவைகளை பதிவில் ஏற்றினான். மணி ஆகிறது என்ற நினைவு வர, மாலை வந்து பின்னுட்டங்களுக்கும், தனி மடலுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று மனமில்லாமல் இடத்தை விட்டு எழுந்தான்.

மாலை திடீர் ஏற்பாடாய் ஒரு கிளைண்ட் மீட்டிங். அங்கேயே சாப்பாடும் ஆகிவிட்டது. இரவு பத்து மணிக்கு வீடு திரும்பியதும், உடையை மாற்றிக் கொண்டு கணிணி முன்னால் உட்கார்ந்தான்.

"இன்னைக்கு பூரா எனக்கு வேலை அதிகம். முதுகு வலிக்குது. மாத்திரைப் போட்டுக்கிட்டு படுக்கிறேன். பிளாஸ்குல பால் வெச்சிருக்கேன். குடிச்சிடுங்க"

"கலா, வர வர உனக்கு வீட்டு வேல செய்ய சோம்பல் அதிகமாயிடுச்சு. அந்தக்காலத்துல எங்கம்மா விறகு அடுப்பு, அம்மி, ஆட்டுக்கல்லுன்னு எப்படி வேல செய்வாங்க தெரியுமா? வேல செஞ்சா உனக்கே நல்லது. சும்மா வீடு வீடா போயி என்ன வம்பு?"

"தோ பாருங்க, வம்படிக்க ஒண்ணும் நா போகலை. பர்வீன் வீட்டுல கம்ப்யூட்டர் கத்துக போறேன். ஒங்கள கத்துக்குடுங்கன்னு கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு. பிள்ளைங்க கிட்ட கேட்ட, நக்கல் அடிக்குதுங்க"

மனம் குளிர்ந்து இருந்ததால், "கலா, நான் எளுதின கவிதைக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள். உனக்கு படிச்சிக்காட்டட்டா?" என்றதும்,
கலா பரபரப்பான குரலில், " இன்னைக்கு பூஜைக்குப் போயிருந்தேன் பாருங்க. அங்க லீலான்னு, கரோமா ஆஸ்பிடல்ல கைனகாலஜிஸ்டா இருக்காங்களாம். அவங்களுக்கு கவிதை, கதை எல்லாம் நீங்க சொல்லுவீங்களே பிலாக்குன்னு அதுலையும் எளுவாங்களாம். நானும் நீங்க எளுதுவீங்கன்னு சொன்னேன். நீங்க என்ன பேர்ல எழுதுறீங்க? அவங்க தமிழ் மகள்ங்கர பேர்ல எளுதுவாங்களாம்" அவள் சொல்ல சொல்ல அசோக் அப்படியே உட்கார்ந்து விட்டான்.

திரையில், தமிழ் மகள் அனுப்பிய கமெண்ட்டில் " கவி சிறுக்குயில் அவர்களே! பெண்களின் போராட்டங்களையும், சிரமங்களையும் ஆவணப்படுத்தியுள்ள உங்கள் கவிதைத்தான் மகளீர்தின படைப்புகளில் முதலிடத்திற்கு தகுதியானது" என்ற வரிகள் அவனைப் பார்த்து சிரித்தன.

தன்னை சமாளித்துக் கொண்டு, "மாத்திர போட்டுக்கிட்டே இல்லே. போய் படு, காலைல பேசலாம்" என்றான் அசோக்.

கணிணியை அணைத்துவிட்டு, பாராட்டுகளில் கிடைத்த உற்சாகம் மொத்தமும் வடிந்துப் போய், தமிழ் மகள் போன் செய்தால் என்ன
சொல்வது, கலாவிடம் எப்படி மாற்றி சொல்வது என்று யோசித்துக் கொண்டே புரண்டு புரண்டு படுத்தான் அசோக் என்ற கவிஞன் கவிசிறுக்குயில்.

SurveySan said...

thanks usha.

Shakthi said...

ஷைலஜா,ராமசந்தரன்உஷா..கலக்கிடீங்க..நானும் யோசிக்கிரேன் கத வரமாட்டேங்குது..

Shakthi said...

தவிப்பு


ஒரு நாள் அவனை பார்க்கவில்லை அதனால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் மீனா.தன்னை எப்போதும் கவனிக்கும் அந்த கண்கள்,பார்த்தும் பார்க்காதது மாதிரி அவனின் நடிப்பு,பாசமும் அன்பும் நிறைந்த அவனது குனம்.மீனாவின் மனம் ஒரு நிலையில் இல்லை.எப்போது விடியும் என்று கடிகாரத்தையே பார்தபடி இருந்தாள்.
பொழுதும் விடிந்தது.ஓடி வந்து வாசலில் நின்றாள்.அவன் எப்போதும் அந்த சமயத்தில் இவளுக்காக காத்திருப்பான்.இன்று அவன் அங்கு இல்லை.`ஏண்டீ என்ன பண்ற அங்க` என்று அம்மாவின் குரல் கேட்டதும் உள்ளே ஓடினாள்.மதியம் சாபிடும் போது அவளின் தோழி வந்தாள்.அவசர அவசரமாக சாப்பிட்டு தன் தோழியிடம் விஷயத்தை கூறினாள்.`நீ ஒன்னும் கவலைப்படாதே நான் ஏதாவது செய்ய முடியுமானு பாக்குரேன்`என்று கூறி விடைப்பெற்றாள்.அரை மனதுடன் அவளை வழி அனுப்பிவைத்தாள்.இரவும் வந்தது.. படுக்கைக்கும் போகமனமிலாமல் அவள் தோழியை மனமார சபித்துக்கொண்டிருந்தாள்.`வரேனாளே ஆளயே கானமே` மனம் பதரியது.திடீரென அழைப்பு மனி சத்தம் கேட்டு ஓடினாள்.ஆம்.தன் தோழி வந்திருந்தாள்.அவளை கண்டதும் ஒரே சந்தோஷம்.அவனும் இருந்தான் அவளுடன்.தன் தோழி பிடியிலிருந்து ஓட பார்த அவனை நில்லுடா ராமு..`எங்கே போய்ட`என்று செல்லமாக கண்டிதாள்.கட்டிபிடிதுக்கொண்டாள்.தன் செல்ல நாய்க்குட்டி கிடைத்த சந்தோஷத்தில் நிம்மதியாக படுக்கைகு சென்றாள்.

SurveySan said...

ஷைலஜா, உஷா, ஷக்தி, (சர்வேசன் ஹிஹி),

அருமையான மினி-கதைகள்.

கலக்கல்ஸ்.

4 தான் தேறியிருக்கு.
மத்தவங்க அனுப்பாம என்ன பண்றாங்கன்னு தெரியல.
மத்த்வங்களே, கதை எங்கய்யா?

Radha Sriram said...

சர்வேசன் கொஞ்சம் ஆங்கில டயலாக் இருக்கலாமா?

நானானி said...

நான் ஒரு புதுமுகங்க, உங்க தலைப்பை பார்த்தேன், நான் இப்ப பதிஞ்ச சமீபத்திய கதைப் பதிவு, உங்க ரூல்ஸோட ஒத்துப் போகுது, பதிவுல சேத்துப்பீங்களா?

என்னோட பதிவு, இன்னமும் இணைக்கப்பட தமிழ்மணத்தில் தாமதமாகிறது, அறிமுகப் பக்கத்தில் வரவில்லை. உங்க மூலமா, அறிமுகமாகட்டுமே :)கதை கீழே:

இருபத்தியெட்டாவது நட்சத்திரம்!


'கோ..கிலா.....!' காலையில் எழுந்ததிலிருந்தே....கோகிலா..கோகிலாதான்
நரசிம்மனுக்கு. ஆபீஸ் கிளம்பும்போதும் 'கோகிலாஆஆஆ....!'
'வந்தேன்' பூஜை வேலையை விட்டுவிட்டு.என்ன என்பதுபோல் பார்த்தேன்.
'அதை திருப்பி சொல்லு..'

'உத்திரட்டாதி'

'ஒகே!ஒகே! ஞாபகம் இருக்கு' என்றபடி காரிலேறி அலுவலகம் சென்றுவிட்டார்.
மதியம் ஒரு மணியிருக்கும்..போன் அலறியது. பாதி சாப்பாட்டில் ஓடிப்போய்
காது கொடுத்தேன்,'madam, sir wants to talk to you.' அவரோட செகரட்டரி குயில்
போல் கூவினாள்.
அவர் லைனில் வந்து 'கோகி... இன்னொரு வாட்டி சொல்லேன்'
அடடா...ஆபீஸிலும் இதே நினைவா...'உத்திரட்டாதி! என்று இருத்தி சொன்னேன்.
மாலையாயிற்று..வேலை முடிந்து வந்து காரிலிருந்து இறங்கியபடியே
டிரைவரிடம் ,'நாளை காலையில் 8-மணிக்கே வந்துவிடு,' என்றபடியே உள்ளே
வந்தவர் என்னைப்பார்த்து ,'கோகிலா! டிரைவரை சீக்கிரம் வரச்சொல்லிவிட்டேன்,' ரொம்ப ஞாபகமாக சொல்லிவிட்டாராம்! உடனேயே
'இன்னும் ஒரே ஒரு தரம் சொல்லிடேன்!..ப்ளீஸ்!' அதானே பார்த்தேன்!
'உத்திரட்டாதி...உத்திரட்டாதி..உத்திரட்டாதி.' நொந்தேன் நூலானேன்.
வேறொன்றுஇல்லை, அமெரிக்காவிலிருக்கும் எங்கள் மகனுக்கு பத்து
நாட்கள் முன் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதற்காக நாளை வெள்ளிக்கிழமை அங்கு குழந்தைக்கு பெயர் சூட்டு விழா. அங்கெல்லாம்
பிரசவத்துக்கு ஹாஸ்பெட்டலில் சேரும்போதே குழந்தையின் பெயரைச் சொல்லிவிடவேண்டுமாமே! அங்கு அதுதான் வழக்கமாம்! மருமகளின் பெற்றொர்
உதவிக்காக சென்றிருக்கிறார்கள்,இங்கு இதுதானே வழக்கம்! ஹி..ஹி..
என் கணவர் இங்கு சென்னையில் ஒரு MNC-யில் நல்ல பதவியில்
இருக்கிறார். எப்போதும் பிஸி..பிஸி..பிஸி. அவரது அன்றாட வேலைகளைக் கூட வீட்டில் நானும் ஆபீசில் செகரட்டரியும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும்.

இன்று காலையில் எழுந்தவுடன் அவரிடம் ,'என்னங்க! நாளைக்காலையில்
நாமிருவரும் வடபழனி கோயிலுக்குப் போய் பேரக்குழந்தை பேரில் ஓர்
அர்ச்சனை செய்துவிட்டு வருவோம்...என்ன?..ஓகேவா?' உள்ளுக்குள் சிறிது
பயம் எங்கே வேலையிருக்கிறது என்று சொல்லிவிடுவாரோ..என்று.
ஹப்பா...! உற்சாகம் பொங்கிவழிந்தது முகத்தில். துள்ளிக்குதித்துக்கொண்டு,
'அப்ப, நாந்தான் குழந்தையின் பெயரும் நட்சத்திரமும் சொல்வேன்! உனக்கு ஓகேவா?' என்றார் குழந்தையைப்போல்.

'பின்ன..? தாத்தாவா லட்ஷணமா நீங்கதான் சொல்லவேண்டும்'
ஒரே பெருமை! முகத்தில். அது என்னங்க...? பேரக்குழந்தை பிறந்து தாத்தாவாகிவிட்டால் அவர்கள் குணச்சித்திரதையே புரட்டிப்போட்டுவிடுகிற்து!? இவ்வளவு மகிழ்ச்சியாய் அவரைப்பார்த்ததில்லை.
குழந்தைக்கு அவரது அப்பா பெயராம்..அதனால் மறக்காதாம்! நட்சத்திரம்
மட்டும் அப்பப்ப மறக்கிற்து.
இரவு உணவு முடித்து சிறிது நேரம் வீணையிசை கேட்டுவிட்டுத் தூங்கப்போனேன்.

படுக்கையில் இவர் தூங்காமல் யோசனையிலிருந்தார். 'என்னவாச்சு?' என்றேன்
'உனக்காகத்தான் காத்திருந்தேன், தூங்குமுன் ஒருமுறை சொல்லிவிடேன்! ப்ளீஸ்ஸ்..!

சரி!..உ..த்..தி..ர..டா..தி!' தாங்காதடா சாமி', என்றவாறே தூங்கிப்போனேன்.

நடுஇரவில் திடீரென்று விழித்தேன்...பார்த்தால்... விட்டத்தை பார்த்தவாறு
கொட்டகொட்ட விழித்திருந்தார்!!! கெஞ்சும் பார்வை பார்த்தார். 'சரி..சரி..
உத்திரத்தையே பார்த்துக்கொண்டிருகிறீர்கள் அல்லவா? அதையே ஞாபகத்தில்
வைத்துக்கொள்ளுங்கள்..உத்திரட்டாதி!!!!!! இல்லையென்றால் நானே சொல்லிவிடுகிறேன் இப்போது நிம்மதியாகத்தூங்குங்கள்.'
என்றவாறே உறங்கிப்போனேன்.

காலையில் இருவரும் சீக்கிரம் தயாராகி டிரைவர் வந்ததும் உற்சாகமாகக்
கிளம்பினோம். டிரைவர் ,'நூரடி ரோடு வழியா அல்லது டிநகர் வழியா?' என்று கேட்டார். எப்படியாவது சீக்கிரம் போ!

கார் ராஜ்பவன் தாண்டி டிநகர் வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் வந்தது.
பாலம் ஏறி இறங்கவே இருபது நிமிடமாயிற்று. ஒரு வழியாக ஆற்காடு ரோடு கடந்து வடபழனி கோயிலை அடைந்தோம்.

காரிலிருந்து விறுவிறுவென்று கோயிலை நோக்கி நடக்கவாரம்பித்தார்.
'நில்லுங்க..நில்லுங்க..'என்று நிறுத்தி அர்ச்சனை பொருட்கள் வாங்ச்சொன்னேன். முன்னேப்பின்னே கோயிலுக்கு வந்திருந்தால்தானே!!
அவருக்கு கோயிலெல்லாம் அவரது அலுவலகம்தான்!!

காலணிகளை அதற்கான இடத்தில் விட்டுவிட்டு நேரே முழுமுதற்கடவுள்
வினாயகரை வணங்கி, பின் நேரே முருகன் சன்னதிக்குவந்தோம்.
நான் வழக்கமாக வரும் கோயில்களில் இதுவும் ஒன்று. என்னைபார்த்ததும் குருக்கள் ஓடோடி வந்தார்,'என்னம்மா செளக்கியமா? பேரன் பிறந்திருக்கிறானாமே! ரொம்ப சந்தோஷம்! அதிசயமாக சாரும் வந்திருக்கிறாரே? என்ன விசேஷம்?' என்றார். இவருக்கு ஒரே ஆச்சரியம்!
'உனக்கு இவ்வளவு வரவேற்பா..!'
குருக்கள் அர்ச்சனைத் தட்டைவாங்கியவாறே,' யார் பேருக்கு அர்ச்சனை? என்றார்.

நான் வாயைத்திறக்குமுன்னால், இவர், தன் தந்தை பேரைச்சொல்லிவிட்டு
'திருவட்டாதி..! என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாரே பார்க்கலாம்!!!!!

குருக்கள் ' திருதிரு'என்று விழித்தார். என்னடா? இது இருபத்தேழு நட்சத்திரங்கள் தானே? இது என்ன இருபத்தியெட்டாவது நட்சத்திரமா...? புதிதாகத் தோன்றிவிட்டதா என்று குழம்பிப்போனார். ஒருவாறு அவரைத் தெளியவைத்து பூஜையை முடித்துகொண்டு பிரகாரத்தில் வந்து மெளனமாக அமர்ந்தோம்.

ஒரு கணம்தான்! ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
போவோர் வருவோர் எங்களை வேடிக்கைப்பார்க்க, 'யார் பையன்' படத்தில் N.S. கிருஷ்ணனும் T.A. மதுரமும் போல் 'கொல்லென்று'
சிரிக்கவாரம்பித்தோம்.......!

வெற்றி said...

சர்வேசன்,
பதிவுக்குத் துளியும் தொடர்பில்லாத பின்னூட்டம். நீங்கள் என் பதிவில் கேட்டிருந்த வினாவிற்கான விடை.தாமதமான பதிலுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

SurveySan said...
/* த.வெ.உ போடோ அனுப்பலியே. என்ன ஆச்சு? */
ஐயோ, தெய்வமே சர்வேசா! மன்னித்துக் கொள்ளுங்கள். பணிநிமித்தம் இடமாற்றம் அது இது என சுமைகள் வந்ததால் தமிழ்மணம் பக்கம் கடந்த ஒன்றரை மாதங்களாக வரவில்லை. அசெளகரியத்திற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

Radha Sriram said...

சர்வேசன் என் கேள்விக்கு என்ன பதில்??

பினாத்தல் சுரேஷ் said...

சர்வேசன்,

என் போட்டிக்கதை இங்கே.

SurveySan said...

radhasriram,

english dialogues are Ok. :)

SurveySan said...

Nanani, Penaths, thanks for the stories. I will add it.

vetri, no worries :)

(a little busy lately , hence the delay in replies )

SurveySan said...

kadhai anuppunga makkals

சேதுக்கரசி said...

நண்பரே, இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

SurveySan said...

சேதுக்கரசி, தகவலுக்கு நன்றி./
கவிதைதான் எழுத வராது :(

SurveySan said...

பத்து பேர் சேரலியே? போட்டி வைக்க முடியாம போயிடுமே. :(