Saturday, March 3, 2007

6. விருப்பங்கள் - நான் நடித்த படித்தலிருந்து ஒரு பாடல் & more...

வாங்க வாங்க!

இந்தப் பதிவில் மூன்று விருப்பங்கள் கேட்க்க உள்ளேன். இதற்கு முன் கேட்ட விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனாலும், இன்னும் பலரும் பாட முன்வந்தால் சுவாரஸ்யம் கூடும்.

நல்லா SPB மாதிரி பாடணும்னு அவசியம் கிடையாது. யார் வேணா பாடலாம், கோதால எறங்கினாதான் எவ்ளோ ஜாலியான விஷயம் பாடரதுன்னு தெரியும்.

சோ, என்டர் த கோதா.

சரி விருப்பத்துக்கு வருவோமா?

1) என்னடா, நான் நடித்த படம்னு சொல்லிட்டேனேனு பாக்கறீங்களா? ஆமாங்க, நானும் சினிமால நடிச்சு அப்பறம்தான் சர்வே எடுக்க வந்தேன்.

சின்ன வயசுல, இஸ்கூல் போகும் நாட்களில், ஒரு வேன்ல ஒக்கார வெச்சு எங்கியோ கூட்டிட்டு போனாங்க. அங்க நில்லு, இப்படி ஒக்காரு, இங்க நடந்து வா, மேல பாரு, கண்ணாடி போட்டுக்கோன்னு சொல்லி 'நடிக்க' வச்சாங்க.

ஒரு மாசம் போச்சு ஷூட்டிங். ரெண்டு பாட்டுல கூட ஆக்ட் கொடுத்திருக்கேன்.

ஹைலைட் என்னன்னா, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிதான் ஹீரோ படத்துக்கு.
இன்னா ஸ்டைலு, இன்னா கரிஸ்மா, இன்னா ஸ்மார்ட்டு - சூப்பர்ங்க ரஜினி.
படம் முழுக்க ஒரு வைட் பைஜாமால நச்சுனு இருப்பாரு.
படத்துக்கு இசை நம்ம இசைஞானி இளையராஜா சார். தூள் டக்கர் பாடல்கள் படத்துல.

அதுலயும், நான் விருப்பமா கேக்க போற பாட்டு இருக்கே, பலரும், அவர்கள் விரும்பிய டாப்-10 பாடல்களில், இதை கண்டிப்பா வச்சிருப்பாங்க. கேட்டாலே கண்ணுல தண்ணி வரும்.
(அதிலும், என் ஏக்டிங்கும் பாத்தா, தேம்பி தேம்பி அழுக வரும்).

என்ன படமா? இன்னுமா கண்டுபிடிக்கல? படம் பேரு, அன்புள்ள ரஜினிகாந்த்.
எந்த பாட்டா? லதா ரஜினி பாடிய, கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே என்ற பாடல்.

நான் என்ன கேரக்டரா வரேனா? அந்த படத்துல ஒரு 100 பசங்க, கண்ணு தெரியாத மாதிரியும், ஊனமுற்ற மாதிரியும் வருமே தெரியுமா?

அந்த நூத்துல ஒண்ணுதேன் நானு! :))))))))))

பாடல் வரிகள் இங்கே.

பாடலின் ஒலி இங்கே.

எல்லாரும் பாடி அனுப்புங்க. இதை பாடுதலே ஒரு சுகமான அனுபவமா இருக்கும். முடிந்தால், முழுப்பாடலும் பாடி அனுப்புங்க. (ஆண்களும் பாடலாம்). நன்றி!

****************
a) Found this in Sowmyas blog - Kadavul Ullame
****************

2) வல்லிசிம்ஹனின் விருப்பம், தூக்கு தூக்கி படத்துலேருந்து, 'ஏறாத மலைதனிலே' என்ற சூப்பர் நாட்டுப்புற ஸ்டைல் பாடல்.
இந்த பாடலின் வரிகள் இங்கே
பாடலின் ஒலி வடிவம் கிடைக்கல. தெரிஞ்சவங்க பின்னூட்டம் போடுங்க.
(கான கருங்குயிலே கச்சேரி வைக்கப் போறேன் என்ற ஜேசுதாஸ் பாடல் ஒன்று, இந்த பழைய பாடலிலிருந்துதான் lift ஆயிருக்குன்னு நெனனக்கறேன் :) ).

ஜாலியா பாடி, இதையும் அனுப்புங்க மக்கள்ஸ். நன்றி!
****************
a) 'ஏறாத மலைதனிலே' - by VSK

SK_EERAdha.wav


b) ஏறாத மலைதனிலே - by ஜீவா
Eraatha malaithani...


****************


3) Jeeves'ன் விருப்பமான கன்னடப் பாட்டு. இதே பாட்டு தமிழ்லயும் இருக்கு. இளையராஜாவின் இசையில் SPBன் சூப்பர் பாட்டு அது. கன்னடப் பாட்ட இங்க கேளுங்க. அது எந்த தமிழ்பாட்டுன்னு கண்டுக்கினு, பாடி அதையும் அனுப்புங்க. நன்றி!
(பி.கு: jeeves, உங்க பதிவுல வந்த உடனே, சூர்யா FM அலருது - அத defaultஆ பாடற மாதிரி வெக்காதீங்க சாரே :) ).

பாட்டுக்கு பாட்டு, தேன்கூடு சுடர் மாதிரி ஸ்லோவா நவுருது. எல்லாரும் கோதால குதிங்க மக்கள்ஸ்.

வெட்கம் தவிர்! :)

(பி.கு: வேலை ஜாஸ்தியாயிடுச்சு + ட்ராவலும் ஜாஸ்தியாயிடுச்சு - சோ, பாடல்களை ஒரு esnips மாதிரி public websiteல் ஒரு public folder க்ரியேட்டி, நீங்களே ஏத்திடுங்க. URL பின்னூட்டிடுங்க. நேரம் கிடைக்கும்போது, பதிவில் நான் சேர்த்துவிடுகிறேன். பின்னூட்டம் உடனுக்குடன் தெரிய மாடரேஷன் தூக்கிட்டேன் (வாழ்க டமில்மணம்), on a trial basis :) ).

25 comments:

ஷைலஜா said...

அடடே சினிமால எல்லாம் நடிச்சி இருக்கீங்களா, கலக்கறீங்களே சர்வேஸ்! நல்ல பாட்டு தான் பாடிடுவோம்..(பி.கு.பாட்டுக்கு பாட்டுக்கு பின்னூட்டமிட்டால் அது பிகுசெய்கிறது...அப்பாவி ,அனாமிகா தமிழ்ப்ரியன் எல்லாரும் நல்லாப் பாடினாங்க.. ஷக்திகிட்ட நான் சொல்ல நினச்சது நந்த லாலா பாட்டு கொஞ்சம் எனக்கு கஷ்டம் தயக்கம்மா இருக்கு பாட அவங்களப் பாடச்சொல்லுங்க சர்வேஸ்)
ஷைலஜா

SurveySan said...

ஷைலஜா,

வாங்க வாங்க. நடிச்சிருக்கேனாவா? பிலிம் பேர் அவார்ட் மிஸ் ஆயிடுச்சு :)
கடவுள் உள்ளமே பாடி URL பின்னூட்டுங்க. சூப்பரா இருக்கும் :)

ஷக்தி, நோட் த பாயிண்ட்.

SurveySan said...

படித்தலிருந்து = படத்திலிருந்து.

ஈமெயிலில் வந்த இத பாதீங்கல்ல?

-L-L-D-a-s-u said...

என்னுடைய பதிவு ஒன்றில் இதே மாதிரியான விஷயத்தை பாலா பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இங்கே

Iyappan Krishnan said...

FM eduththuttEn


innaikku moonu paattaiyum oruvazi pannidarEn

SurveySan said...

LLDasu, உங்களின் first class விமர்சனம் படித்தேன்.
பாலா எந்த படத்தில் நடிச்சாருன்னு சொல்லலியே?
எனது, போட்டியாளரா இருந்திருக்காரு சின்ன வயசுல.ஹ்ம் :)


Jeeves, போட்டு தாக்குங்க :)

வல்லிசிம்ஹன் said...

சூப்பர் சர்வேசன். ஏறாதமலைதனிலே போட்டுட்டீங்களே.
பிரமாதம்.
சிவாஜி நடிப்பும்,டிஎமெஸ்சார் குரலும் அத்தனை நன்றாக இருக்கும்.
நானும் தேடுகிறேன் இந்தப் பாடலை.
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.

Anonymous said...

noone?

SurveySan said...

இதையும் நானேதான் பாடணுமா? என்ன கொடுமை சரவணன்?

Anonymous said...

உங்க வயசு = மீனா வயசு. கரெக்டா ?

SurveySan said...

//உங்க வயசு = மீனா வயசு. கரெக்டா ?//

சரியா தெரியலீங்க. மீனா அக்கா பாருங்க, மீனா அக்கா பாருங்கன்னு எங்க மிஸ் மீனாவ காட்டின மாதிரி ஞாபகம் :)

SurveySan said...

check this out.

Sowmyas rendition of Kadavul Ullame
kadavul Ullame

VSK said...

I will post 'ERAdha malaithanilE" tonite!

SurveySan said...

Thanks VSK.

பாட‌ரதுக்கு வெக்கப்படராங்க நம்ம ஆளுங்க. டூ பேட் :(

VSK said...

போட்டு உங்களுக்கு அனுப்பி இருக்கேன்!

பப்ளிக் வெப்ஸைட்டுக்குப் போக வழி தெரியலை.
மன்னிச்சுக்கோங்க!

முடிஞ்சா எடுத்துப் போடுங்க.

வழி அனுப்புங்க!

SurveySan said...

VSK,

Thanks for the song. Great singing!!!

I added it to the post.

( you can create a free account in esnips.com and upload a file into a public folder. I will send detailed steps next time)

Anonymous said...

எஸ்கே, நல்லா பாடியிருக்கீங்க சார்.

Anonymous said...

http://www.esnips.com/doc/b97875f3-10f5-417f-9e68-75a158c8f7f0/Eraatha-malaithanilE

விதியாகப் பட்டது வலியது. அதையாராலும் வெல்ல முடியாது
பாண்டவாள பாக்கலையோ.. ஜானகியவிட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ? ஜீவாவ விட்டு பாடச்சொல்லி மக்களையெல்லாம் கொடுமை படுத்தலையோ ?

பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்ல..

விதி வலியது.....

SurveySan said...

ஜீவா, கலக்கிபுட்டீங்க.
அங்கங்க மூச்சு வாங்கரது கேக்குது, மைக் handling கத்துக்கிட்டா சரியாயிடும் :)

உங்க உரல் என்னங்க?

Anonymous said...

என்னங்க. நான் கேட்டுத்தானே கன்னடப் பாடல் கூட போட்டீங்க என் கிட்டையே உரல் கேட்டா எப்படி ?

kaladi.blogspot.com

SurveySan said...

ஜீவா, இதுக்கு முன்னாடி பின்னூட்டத்துல, 'other' option யூஸ் பண்ணதால, ஒரு confirmationக்காக கேட்டேங்க.

நன்றி :))

Anonymous said...

சர்வேசா நீங்க பாடாம இருக்கறதோட மர்மம் என்ன சர்வேசா ?

மறைந்திருந்து பாடாமல் இருக்கும் மர்மம் என்ன.. சர்வேசா..


ரெண்டு பாட்டையும் நீர் பாடறீர்.. பாடனும் அம்புட்டுதேன்

SurveySan said...

ஜீவா,

அடடா, உங்கள் அன்பு திக்குமுக்காட வைக்குதுங்க்க..
ரெண்டு பாட்டும், ரொம்ப நல்ல பாட்டு, ட்ரை பண்ணேன், அவ்ளோ நல்லா வரல.

ஆயர்பாடி மாளிகையில், rehearsal செஞ்சுக்கிட்டு இருக்கேன், ஓரளவுக்கு தேறினதும்ம் போட்டுடுவேன் :)

ஷைலஜா said...

yeraadhamalai...SK_______80marks
yeraadhamalai...jeevs--------50marks!
welldone! congrats!
shylaja

SurveySan said...

ஷைலஜா,
வாங்க வாங்க.
என்ன ரொம்ப நாளா காணும்? பி.ஸியா?