இந்த வருஷம் நல்ல படியா அமையும்னு யாரோ சொன்னது ஞாபகம் வருது.
நேத்துதான், இந்த நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாத்திலயும் நம்பிக்கையில்லன்னு ஒரு பதிவ போட்டிருந்தேன்.
ஆனா, இப்ப என் கண்ணையே நம்ப முடியல.
ரவிராஜ் என்ற பதிவர், ப்ரபல டைரக்டர் கிருஷ்ணராஜிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 'நச்' கதைப் போட்டியில் இடம்பெற்ற இரண்டு கதைகள் இவரை வெகுவாகக் கவர, அதற்கு மேலும் முலாம் பூசி, ஒரு திரைக்கதையை அமைத்திருந்தாராம்.
நேற்றைய முன்தினம் நடந்த ஒரு திரைப் பட விழாவில், ப்ரபல இந்தித் தயாரிப்பாளர், ராஜ் யஷ்ஷிடம், இந்த இரு திரைக்கதையைப் பற்றியும் விவரித்தாராம்.
கதையில் இருந்த திடீர் திருப்பங்கள், யஷ்ஷை வெகுவாகக் கவர, ரவிராஜிடம் அந்த கதைக்கான உரிமையை உடனே பெறும் படியும், தன்னை அடுத்த மாதம் மும்பையில் வந்து சந்திக்குமாறும் கூறியூள்ளாராம்.
ரவிராஜ் நேற்று என்னை அழைத்து அந்த இரு கதைகளூக்கும் தலா 50,000 ரூ, முன்பணமாகத் தரட்டுமா என்று கேட்டார்.
யாரோ எழுதிய கதைக்கு நான் எப்படி பணத்தைப் பெறுவது என்ற குழப்பம் எனக்கு.
அந்த இரு கதைகளின் உடமஸ்தர்களும், என்னைப் போல் 'முகமூடிப்' பதிவர்கள்.
மடல் அனுப்பியும், அவர்களிடமிருந்து பதிலில்லை.
இன்னும்ம் இரு தினங்களுக்குள் பதிலில்லை என்றால், முழுப் பணத்தையும் (ரூ.75,000 தலா) என் பெயரில் பெற்று, பகுதியை நன்கொடையாகவும், மீதிப் பாதியை நானும் வைத்துக் கொள்ளலாமென்று முடிவு.
ஒரு பக்கம், நம் கதைகள் திரைப்படங்களாவது மகிழ்ச்சி தந்தாலும், இந்த முகமூடி வாழ்க்கையால், உரிய அங்கீகாரம் கிட்டாமல் போகும் பதிவர்களை எண்ணி வருத்தமே மிகுகிறது :((
;)
Tuesday, April 1, 2008
பதிவர்களின் 'நச்' கதைகள் திரைப்படங்களாய்...
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
TLL என்ற Stock 30000% ஒரே நாளில் வாரி வழங்கிய அதிசயமும் இன்று நடந்திருக்கிறது.
http://finance.google.com/finance?client=ob&q=TLL
இரண்டாவது ஆட்டமா...
ஆரம்பமே பயங்கரமா இருக்கே..
நானும் முகத்தை மறைச்சு தான் எழுதினேன்..
ஒரு 50% இங்கே தள்ளுங்க...
முட்டாள்கள் தினம் கொண்டாடவில்லை என்றால், அந்தக் கதைகளின் தலைப்பைச் சொல்லய்யா..
//முட்டாள்கள் தினம் கொண்டாடவில்லை என்றால், அந்தக் கதைகளின் தலைப்பைச் சொல்லய்யா..///
;)
TBCD, why vavvaal in logo?
:)
tagline punch :) :))
நன்றி பா.பாலா :)
ஆருபா கெலிச்சது..
சொம்மாக்காச்சீ லூலுலாளியா..?
லூலுலாளியேதான் ;)
லூலுலாளியேதான் ;)
ஆரம்பமே பயங்கரமா இருக்கே..
Madurai citizen?
கோமாவா? ;)
Post a Comment (no comment moderation)