Friday, December 21, 2007

சிறந்த பாடகர் 2007!

அப்படியாக இந்த வருஷமும் முடியப்போவுது.

ஒரு பக்கம், 'நச்'னு ஒரு கதை போட்டி விருவிருப்பா நடந்துக்கிட்டு இருக்கு. 50 பேர், வித விதமா கதை எழுதிக் கொடுத்திருக்காங்க. (டிசம்பர் 23ஆம் தேதி கடைசி பசங்களா. கத அனுப்பாதவங்க அனுப்பிடுங்க சொல்லிப்புட்டேன். பல கதை 'நச்' மன்னர்கள், போட்டிக்கான கதைய சொல்லிப்புடுங்க. எல்லாருக்கும் நன்றி!)

கவிதைப் போட்டி, கடிப் போட்டி, புதிர் போட்டி எல்லாமும் கூட நடந்துக்கிட்டிருக்கு.
'சிறந்த பதிவர்' விருதை, இந்த தடவ சங்கமம் குழுவும், தமிழ்மணம் குழாமும் நடத்தரதா அறிவிப்பு பாத்தேன். எனக்கு வேல மிச்சம் ;)

[விருது கொடுப்பது, வாங்கரதெல்லாம் தப்பில்லை. யார் வேணா யாருக்கு வேணா விருது கொடுக்கலாம். வாங்கிக்கரது, வாங்கிக்காததும் அவங்கவங்க தனிப்பட்ட இஷ்டம். ஆகையால், கொடுக்கரவங்கள் கொடுக்க விடுங்க, வாங்கரவங்கள வாங்கிக்க விடுங்க. ஸ்ஸ்ஸ்ஸ்]

நான் வேற என்னதான் பண்றதுனு யோசிச்சப்போ வந்த ஐடியா இது.

நம்ம வட்டத்தில், பல நல்ல பாடகர்கள் இருக்கீங்க (என்னையும் சேத்துத்தான் ஹிஹி).

வருஷத்த 'நச்'னு முடிக்கலாம்னு, இந்த 'சிறந்த பாடகர்' அறிவிப்பு.

காதல் படம் பாத்திருப்பீங்க. அதில் இடம்பெற்ற அருமையான பாடல் "உனக்கென இருப்பேன்".
வரிகளும் சூப்பர். ராகமும் சூப்பர். இசைக்கோர்வையும் சூப்பர். காட்சியமமப்பும் சூப்பர்.
ஹஸ்கி voiceல் சூப்பராவும் பாடியிருப்பாரு ஹரிச்சந்திரன்.

பாடல் வரிகள் இதோ:
உனக்கென இருப்பேன்.... உயிரையும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன்......
கண்மணியே......கண்மணியே .....
அழுவதேன்....கண்மணியே....

வழித் துணை நான் இருக்க...

உனக்கென இருப்பேன்.... உயிரையும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன்......

இனி நீங்க பண்ண வேண்டியதெல்லாம், இந்த வரிகளை நல்லா ப்ரரக்டீஸ் பண்ணி, ராகம் பிறழாமல், 'நச்'னு பாடி அனுப்புங்க.
MP3யா பாடி அனுப்புங்க. (surveysan2005 at yahoo.com). வேறு ஏதாவது தளத்தில் ஏற்றி உரலும் கொடுக்கலாம்.
ஆண்களும், பெண்களும் பாடலாம்.

ராகம் பிழறாமல், நல்லா பாடர எல்லாரும், சிறந்த பாடகர்கள் தான்.
நெறைய பேர் அனுப்பினாங்கன்னா, சர்வே எடுத்து, மக்களையே தேர்ந்தெடுக்க சொல்லலாம், சிறந்த பாடகரை.

முதல் பத்து பாடல்கள் வந்ததும், சர்வே போட்டுடறேன். பரிசெல்லாம் கிடையாது. ;)

ஜாலியா பாடுங்க!

அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



வாழ்க வளர்க!

15 comments:

Anonymous said...

I will send one next week

Suman (from, you know where)

VSK said...

இதுவரைக்கும் கலந்துக்கறதா ஐடியா இல்லை [சண்டே ஊருக்கு போறேன்]

அதுக்குள்ள முடிஞ்சா கலந்துக்கப் பார்க்கறேன்![அதாவது நாளைக்குள்ளே!!]:))

நான் கலந்துகிட்டா.... ஏகப்பட்ட பாடகர்கள் வெற்றிவாய்ப்பை இழந்திருவாங்களேன்னுதான் யோசிக்கறேன்!
:))

SurveySan said...

:)

SurveySan said...

VSK, ஊருக்குப் போயும் பாடலாமே?

முடிஞ்சா, ஊர் மக்கள்ஸையும் பாடவைத்து பதியுங்க.

அங்க டெக்னாலஜி ஜாஸ்தியா இருக்கும். cellphoneலயே ரெக்கார்ட் பண்ணி, உங்களுக்கு mp3 கொடுத்திடுவாங்க ;)

Have a wonderful journey! come back rested!

ஷைலஜா said...

சர்வ்ஸ்! மீண்டும் நான் வந்துவிட்டேன் பாட ரெடி..ஆனா பெண்களும் பாடறமாதிரி வேற பாட்டு கொடுங்களேன் ப்ளீஸ்>>
ஷைலஜா

SurveySan said...

அடுத்த பாடல் கண்டிப்பா பெண்கள் ஸ்பெஷல் தரேன்.

ஆனா, இந்தப் பாட்டு நீங்க பாடியே ஆகணும். அருமையான பாட்டுங்க. பாடி அனுப்புங்க :)

SurveySan said...

பாட்டு எங்கப்பா?

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

இப்பவும் அனுப்பலாமா? இன்னும் 2,3 நாட்களில் அனுப்புகிறேன்.(நான் இல்லை, என் கணவர் பாடுவார்)

SurveySan said...

கோகிலவாணி, கண்டிப்பா அனுப்பலாம்.

வெயிட்டிங்!

SurveySan said...

not even 1? :(

SurveySan said...

யாராவது பாடுங்கய்யா?

வல்லிசிம்ஹன் said...

சர்வேசன்,
ஹை.
எப்படி ரெகார்ட் பண்றது ? எல்லாம் மறந்து போச்சு:(

வழி சொன்னால் (பாட)வர ரெடி. கேக்க நீங்க ரெடியா. எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு இது.

SurveySan said...

hello madam,

இங்க இருக்க ரெக்கார்டர டவுன்லோடு பண்ணி, பாட்ட ரெக்கார்டு பண்ணி mp3ஆ சேவ் பண்ணி எனக்கு surveysan2005 at yahoo.comக்கு அனுப்புங்க.

http://www.mp3mymp3.com/mp3_my_mp3_recorder.html

SurveySan said...

வல்லி மேடம்?

என்னாச்சு?

வல்லிசிம்ஹன் said...

சர்வேசன், டவுன்லோட் செஞ்சுட்டேன்.

நன்றி சுட்டிக்கு.

ரெண்டு நாள்... இருமல் நிக்கட்டும் பாடி.....விடுகிறேன்.