வணக்கம். ரொம்ப நாளா தூங்க விட்டாச்சு, இந்த நேயர் விருப்பம் பக்கத்தை.
போன பதிவுல கேட்ட, 'உனக்கென இருப்பேன்..' பாட்டை யாரும் பாடி அனுப்பலை. நான் பாட முயற்சி பண்ணா, உயிர் போர மாதிரி தொண்டை வலிக்குது, கண்ண கட்டுது.
பிரமாதமான அந்த சங்கதி நிறைந்த பாட்டை பாடும்,வித்வான்கள் நம்ம மத்தியில் யாரும் இல்லாம போனது சோகம். :(
எல்லா நேயர் விருப்பத்துக்கும், பொங்கி எழும், டாக்டரும் இதுல கைய விரிச்சிட்டாரு.
சரின்னு, அடுத்த பாட்டை எடுத்துக்கிட்டு கோதால எறங்கிட்டேன்.
சினிமா தொடர் பதிவு போடும்போது, 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாட்டை பத்தி சொல்லியிருந்தேன். அப்பலருந்து, இந்த பாட்டு, உள்ள எக்கோ ஆகிட்டே இருந்துச்சு.
எவ்வளவு நாள்தான், உள்ள இருக்கர டி.எம்.எஸ்'ஸை அடக்கரது?
அதான், அவுத்து வுட்டுட்டேன்.
இனி, உங்க பாடு, டி.எம்.எஸ் பாடு.
கேட்டுட்டு, உயிர் பிழைச்சீங்கன்னா, வேர யாராச்சும், இத்த பாடி அனுப்புங்க.
லிரிக்ஸ் கீழ இருக்கு.
disclaimer: பாட்டை கேட்க ஆரம்பிக்கும் முன், வால்யூமை கொறச்சு வச்சுக்கங்க.
கொடுக்கல் வாங்கல் பாக்கி இருந்தா, முடிச்சுட்டு வந்து பாட்ட கேளுங்க. என்ன வேணா நடக்கலாம். நான் பொறுப்புலேது.
(if you cant see the widget and if you still want to hear the song, you can click here :))
|
VSK sings:
|
தமிழ் பிரியன் sings.
வரிகள்:
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
பேருக்கு பிள்ளை என்று
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யாரறிவார்
உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
என் வேரென நீ இருந்தாய்
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
ஒரிஜினல் இங்கே: