Thursday, May 31, 2007

11. விருப்பம் - சுகராகமே, ஆயிரம் கண், வசீகரா

லேட்டஸ்ட் நேயர் விருப்பமாக மூன்று பாடல்கள் இடம் பெறுகின்றன.

1) பாரதிய நவீன இளவரசனின் விருப்பமாக கன்னி ராசி திரைப்படத்தில், மலேஷியா வாசுதேவன், வாணி ஜெயராம் இணைந்து கலக்கிய சுகராகமே என் சுகபோகம் நீயே என்ற பாடல்.
இந்த பாடல் ஸ்ரீ ராகத்தில் அமைந்திருப்பதாக கே.கே.நகர் கிருக்கன் கிருக்கியுள்ளது இங்கே :)

கானா பிரபாவுக்கும் ஒரு விண்ணப்பம் கொடுத்தவுடன் டகால்னு ஒரு பதிவ போட்டு பாட்ட ஏத்திட்டாரு. பாடல் இங்கே.

வரிகள்:
சுகராகமே சுகபோகமே
சுகராகமே என் சுகபோகம் நீயே
கண்ணே கலை மானே கதை பேச வருவாயோ
அன்பே அனல்வீசும் விழிவாசல் குளிராதோ.
...
ருசி மிகுந்த மாங்கனி நீயே
பசிச்சவன் நான் பார்த்திருந்தேன்
பரவசமாய் பாடிடும் வாயில் அதிரசமாய் நீ இனித்தாய்
..
~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~
அ. சர்வேசன் குரலில் இந்தப் பாடல்:
இங்கே க்ளிக்கி கேளுங்க

~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~

நீங்களும் பாடி டக்குன்னு அனுப்புங்க. ரொம்ப நல்ல ஜாலிப்பாட்டு இது.

2) வல்லிசிம்ஹனின் விருப்பமாக ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே என்ற பாடல்.
வல்லிசிம்ஹன், எந்த படம் இது? இந்த பாட்டுக்கும் லிரிக்ஸ், ஆடியோ எங்கே இருக்குன்னு யாராவது பின்னூடுங்க.
பாட்ட தெரிச்சவங்க, சடால்னு பாடி அனுப்புங்க.

3) என் விருப்பமாக, மின்னலே திரைப்படத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் கலக்கல் ட்யூனில், பாம்பே ஜெயஷ்ரீயின் கிரங்க வைக்கும் குரலில் ஒலித்த வசீகரா என்ற பாடல்.
யம்மா. என்னா பாட்டுங்க அது. சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் அந்த பாட்ட கேட்டா. பாடல் வரிகளும் ஒரு இளமை கலந்த புதுமையுடன் இருந்தது. படம் வந்த காலத்தில், இந்த பாடலை முணு முணுக்காத வாயே இருந்திருக்காது.
தமிழ் திரைப்படத்துக்கு, மின்னலே படம் ஒரு இனிய திருப்பமாக அமைந்தது. இசையிலும் ஹாரிஸ் ஒரு புது பரிமாணத்தை கொணர்ந்து, இன்னும் தொடர்ந்து கலக்கிக்கிட்டிருக்காரு.
படத்துல, அந்த மழை சீன்ல, ஹீரோ ஹீரோயின மொதல் மொதலா பாக்கர சீன் இருக்கே, அதுக்கு ஒரு fலூட் பிட் வருமே, அடேங்கப்பா.
ஹோம் தியேட்டர் சிஸ்டம் டெஸ்ட் பண்ணனும்னா, அந்த சீன் போட்டு பாத்தா போதும்.
சும்மா நச்சுனு இருக்கும்.
பாடலை இங்கே கேளுங்க
வரிகளை இங்கே படியுங்க.

Y வெயிட்டிங்? மைக்க எடுத்து, பாடல பதிஞ்சு உடனே அனுப்புங்க.
நானும் பாடப் போறேன். ( உங்க தலை எழுத்த யாரால மாத்த முடியும்? :) )

கலக்குங்க!

பி.கு: குழைந்தகளுக்கான பாடல் போட்டிக்கு ஜூன் 15 வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

18 comments:

Anonymous said...

sugaragame en sugabogam neeye
kanne kani amudhe
thunai sera varuvaaye

வல்லிசிம்ஹன் said...

சர்வேசன் ,ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே பாட்டு
சி.எஸ்.ஜெயராமன் பாடியது.
படம் பாவைவிளக்கு.
சிவாஜி நடித்த,கல்கி அவர்களின் கதை.முடிந்தால் வரிகளைத் தேடுகிறேன்.
நன்றி சர்வேசன்.

கானா பிரபா said...

இந்தாங்க தல

http://radiospathy.blogspot.com/2007/06/blog-post.html

கானா பிரபா said...

இந்தாங்க தல

http://radiospathy.blogspot.com/2007/06/blog-post.html

பாரதிய நவீன இளவரசன் said...

தலைவரே.. எனது நெஞ்சார்ந்த நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறேன் :)

SurveySan said...

anony, vallisimhan, gana prabha, prince,

Thanks for the visit and comments.

special thanks to Gana prabha! :)

SurveySan said...

யாரும் பாடத் தயாரில்லையா?

சுக ராகம் டேக்20 வரைக்கும் போயிடுச்சு, இன்னும் சரியா வரல எனக்கு :)

ஷைலஜா said...

வசீகரா சீக்கிரமா நான் பாடி அனுப்பறேன் சர்வ்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி,பிரபா.



பல நாள் கழித்துக் கேட்டேன்.
மிகவும் நன்றி.

SurveySan said...

ஷைலஜா, உடனே அனுப்புங்க. பாடலை கேட்க்க வெயிட்டிங் :)

btw, நானும் 'அஸால்டா', சுகராகமே பாடி ஏத்திட்டேன். கேட்டுட்டு மார்க் போட்டுடுங்க :)

k said...

hii all! நானும் வசீகரா பாடி அனுப்பறேன்....:)

ஷைலஜா said...

அனாமிகா வாங்க எவ்வளவு நாள் ஆச்சு உங்க இனிய குரல் கேட்டு? வசீகராக்குக் காத்திருக்கேன்

ஷைலஜா said...

சர்வ்ஸ் கொஞ்சம் கஷ்டம் அந்தப் பாட்டு குரல்வேற மாத்தணும் அதையும் முயற்சித்த உங்க ஆர்வம் ஆச்சரியமா இருக்கு...பாஸ் ஆயிடீங்க!

SurveySan said...

அனாமிகா, தூள். உடனே அனுப்புங்க.

ஷைலஜா, பாஸாயிட்டேனா? தூள் :)

Anonymous said...

surveysa. enna kodumaiyyaa idhu?

Shakthi said...

எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு..இத மிஸ் பன்னுவேனா..நானும் பாடி அனுப்புறேன்...ஷைலஜா,அனாமிகா உங்க குரல் கேட்டு ரொம்ப நாளாச்சு..கலக்குங்க..

SurveySan said...

shakthi, அனுப்புங்க.

Anonymous said...

maamikka eppa bengaloore varaangO.. sanda pOdanum