Thursday, July 5, 2007

12. ஜன கன மன - சேந்து கலக்குவோம்!



ஜூலை 4, அமெரிக்க சுதந்திர தின விழா.
எல்லா வருஷமும், தடபுடலா கொண்டாடுவாங்க.
ஓசில, இசை நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்து ப்ரம்மாண்டமான வான வேடிக்கையெல்லாம் வாடிக்கை.

அமெரிக்கன் என்ற எண்ணத்தை, வேடிக்கைப் பாக்க வர்ரவங்க மனசுல கஷ்டப்பட்டு ஏத்துவாங்க. பாட்டு பாடரவரு,
"Say U"
"Say S"
"Say A"
"U S A"ன்னு கத்தி, எல்லாரையும் திரும்ப கத்த சொல்லுவாரு. மக்களும் சாமி வந்த மாதிரி கூடவே பாடி, ரொம்ப மெய்சிலிர்த்துத் தான் போவாங்க.

ஆனா, ஒரே நெருடலான விஷயம், அமெரிக்க தேசிய கீதம் பாடரது தான்.
பாவம் ரொம்ப கஷ்டமான ராகத்துல அமஞ்சு போச்சு அந்த பாட்டு.

ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பாரு அதை பாட.
வேடிக்கை பார்க்கும் சாமானியர்கள் எல்லாம் பாட்டு கேக்க மட்டும் தான் முடியும், கூட சேந்து பாடினா, மயக்கம் தான் வரும். ரொம்ப ரொம்ப கஷ்டமான பாட்டு. இங்க க்ளிக்கி கேட்டு பாருங்க உங்களுக்கே புரியும்.

ஆனா பாருங்க, நம்ம ஊரு தேசிய கீதம் எவ்ளோ அழகா பண்ணியிருக்காங்க. Salutes to Tagore!
அதைச் சுற்றி, மற்ற வில்லங்கம் இருந்தாலும், "ஜன கன மன" மாதிரி, சுவையான சுலபமான தேசிய கீதம் வேறு இல்லைன்னே நெனைக்கறேன் (தெரிஞ்சா சொல்லுங்க).

பன்கிம் சந்தர சேட்டர்ஜியின், வந்தே மாதரமும் ரொம்ப இனிமையா இருக்கும், ஆனால், சாமானியர்களால் சுலபமாகப் பாட முடியாது.

உங்கள்ல எவ்ளோ பேருக்கு, "ஜன கன மன" அட்சரம் பெசகாம பாட முடியும்? ( ஐ மீன், இந்தக் குழந்தைய மாதிரி தப்பு தப்பா பாடாம கரீட்டா பாட முடியும்?. கேட்டுப் பாருங்க :) - லம்ப்பா, காவே, பாடவி தாத்தா???? 'அப்பாவி'க்கு என் கண்டனங்கள் :) )

So, அதுவே இன்றைய "நேயர் விருப்பம்".


நம்ம ஊரு சுதந்திரம் அடைந்து 60 வருஷம் ஆகப் போவுது. அடேங்கப்பா.

இதை கொண்டாடும் விதத்தில், உங்கள் அனைவரையும் ஜன கன மன பாடி, mp3 பதிந்து, நேயர் விருப்பத்திர்க்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும், தனித் தனியாகவோ, கோரஸாகவோ பாடி, ஒரு கலக்கு கலக்கி அனுப்புங்க.

சேந்து கலக்குவோம்!
கூட்டாக நம் தேச பக்தியையும், இந்தியன் என்ற உணர்வையும் வெளிப்படுத்துவோம்! :)

உடனே, அனுப்புங்க! ஆகஸ்ட் 15 க்குள்!

பெயரை இப்பொழுதே பதிந்து விடுங்கள். உங்களுக்கு ஒரு சீட் போட்டு வெக்கரேன்.

1) a Kid
2) Surveysan - Click to listen
3) Sumanga, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
8) அப்பாவி
9) TBCD
10) CVR
11) கண்ணபிரான் ரவிசங்கர்(KRS)
12) Kavitha
13) மாதினி
14) k4karthik
15) Marutham
16) மாதிரி, முத்துலெட்சுமி & நண்பர்கள்
17) ஷைலஜா
18) சிறில் அலெக்ஸ் (instrumental)
19) VSK
20) Mrs.(V)SK
..
60) ????

:)

பி.கு: 60 "ஜன கன மன" வந்தால், சர்வே போட்டு, சிறந்த renderingக்கு Rs.1000 பரிசாக அனுப்பப்படும்! :)

61 comments:

SurveySan said...

No one? Comeon!

பெருசு said...

No two

Anonymous said...

yes 1.

Sumangal, Singapore.

பாரதிய நவீன இளவரசன் said...

ரொம்ப நாட்களாக 'ஜன கன மன..' வங்காள மொழிப்பாடல் என்றே நினைத்திருந்தேன். ஆனால், என் வங்காள நண்பர்கள் பலர், நமது இந்த தேசிய கீதப்பாடல் சமஸ்கிருத மொழிப்பாடல் என்றே அருதியிட்டுச் சொல்லுகின்றனர். எது உண்மை...? கொஞ்சம் தெளிவாக்குங்களே.

அரவிந்தன் said...

என் மகள் அமுதசுரபி பாடிய தேசிய கீதம் விரைவில் பதிந்து அனுப்புகிறேன்.

அன்புடன்
அரவிந்தன்

SurveySan said...

Sumangal, Thanks!

Prince,

ஜன கன மன பற்றிய டீடெய்ல்ஸ் இங்க இருக்கு http://en.wikipedia.org/wiki/Jana_Gana_Mana

ஒரே கொடும என்னன்னா, அந்தப் பாட்டு ஜார்ஜ் என்ற ஆங்கேலயரை போற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது.
இந்த காலத்துல, பாரத மாதாவை போற்றுவதாக நினைத்துக் கொண்டு பாட வேண்டியதுதான்.

பாரதிய நவீன இளவரசன் said...

before commenting on your blog, actually i went through this link.

however, what i actually meant was most of the bengalis with whom i spoke about our national anthem where so assertive that the song is composed in Sanskrit only.. check with any of your Bengali friends for other opinion.

SurveySan said...

The original poem done by Tagore was bengali 'Jono Gono Mono'.

The current 'Jana Gana Mana' is Hindi according to
http://simple.wikipedia.org/wiki/Jana_Gana_Mana

The meaning of it bothers me. It was written to praise King George. Is it stupidity that we still sing it today as our anthem :) ?

பாரதிய நவீன இளவரசன் said...

do u really think that Tagore has sung in praise of King George? was he not the great man who threw away the SIR title as a mark of protest against the Jalianwala Bagh firing in 1919? above all, he was for communal harmony and also found a way to enter into the hearts of Mahatma Gandhi.

Anonymous said...

என் கணவருக்கும் ஜனகண மண ரொம்ப பிடிக்கும்.

SurveySan said...

Prince,

From what I read, Tagore wrote this poem for welcoming King George during a ceremony.
So, its natural to say the 'Nayaga' in the anthem is 'King George', indeed.

I read other theories saying, Tagore was very unahappy when he was asked to write a poem praising George. When he wrote the poem he actually meant 'God' as the 'Nayagan' and not really George.

The poem is used for King George. so, why make it the anthem?
Congress should have made Tagore coin a new one - was he out of stock?

its sad we are using a 'used poem' as our anthem :(

more details here http://www.countercurrents.org/comm-chatterjee310803.htm

Anonymous said...

எனக்கும் ஜன கண மண ரொம பிக்கும்

Anonymous said...

pidikkattum pidikkattum.

SurveySan said...

peyar kodungappaa.

Anonymous said...

ஹலோ தல! எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகலங்க, அநியாயமா என் வாழ்க்கையில் விளையாடிட்டீங்களே... யார் பெத்த குழந்தையோ என் தலையில் கட்டிட்டிங்களே... அவ்வ்வ்வ்வ்வ்வ்......

Anonymous said...

ஏமண்டி! என்ற பெயரையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க!

SurveySan said...

Appavi, the mp3 file name said 'appaavi' and I thought its your 'copyrighted' name :)

anyway, sorry about that.

I will add youur name to the list :)

TBCD said...

நான் வேவ் பார்மட்டில் பதிந்து உள்ளேன்.. அதை அனுப்பலாமா..? எப்படி அனுப்புவது,,?

SurveySan said...

surveysan2005 at yahoo.com

TBCD said...

சர்வேசன்... அனுப்பப்ப்ட்டு விட்டது... சரி பார்த்து சொல்லுங்கள்..

SurveySan said...

TBCD ஜன கன மன அனுப்பியதர்க்கு நன்றி. நன்றாக பாடியுள்ளீர்கள்.
தேச பக்தி பீரிட்டு வருது :)

இன்னும் 51 பேர் வரணும்.
:)

இதுவரை பெயர் கொடுத்தவர்களும் பாடலை அனுப்புங்கள். நன்றி!

பரிசுப்பணம் ரூ.1001. 60 பேர் வரலன்னா பரிசுப்பணம் கொடுக்க கம்பெனிக்கு கட்டுப்படியாகாது. உங்க மன தைரியத்தை பாராட்டி ஒரு ஆறுதல் பின்னூட்டம் தான் போடப் படும், பரிசாக. :)

Blogeswari said...

Yep sending it today..

Anonymous said...

Hai I am Rabin

Anonymous said...

The Lord is My Shpeherd I shall not want. Ps 21:1

CVR said...

நான் பாடி உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பி இருக்கிறேன்.
கிடைத்திருந்தால் பதில் அனுப்பவும்!!
நன்றி!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான, அழகான சிந்தனை சர்வேசன்! இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன்!

பல கீதங்களை இசைக்கத் தான் முடியும். சில கீதங்களைப் பாடலாம்! ஆனா ரொம்ப பெருசா இருக்கும்! ஆனா நம் தேசிய கீதம் எல்லாவற்றிலும் short and sweet ஆக உள்ளது!

தேசிய கீதம் பாடும் போது, எழுந்து நிக்கணும், மரியாதை தரணும் என்பதெல்லாம் ஒரு கூட்டத்தில் இருக்கும் போது சரியா வரும்!

ஆனாப் பாருங்க...நான் என் mp3 player-இல் தினம் தினம் கேட்டு மகிழ்வேன்! கால நேரம் எல்லாம் ஒண்ணும் கிடையாது! அப்படியே ஒரு நல்ல இசைப் பாடலைக் கேட்கும் போது் எப்படி மனம் உற்சாகம் அடையுமோ அது போல!

சுதந்திர தினம் அன்று தேசிய கீதத்தின் பொருளையும், அதன் ஜார்ஜ் மன்னர் சர்ச்சை குறித்தும், அதன் பல இசை வடிவங்களியும் பதிவாக இட முயல்கிறேன்! நன்றி!

SurveySan said...

CVR, பாடல் கிட்டியது. அருமை!!

krs, நன்றி நன்றி!
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. நானும் அடிக்கடி கேட்க்கும் பாடல் இது. ஏ.ஆர். ரெஹமானின் ஆல்பம் அருமையா இருக்கும், பல ப்ரபலங்களின் குரலில் இதை கேட்பது அருமை.

சிறில் அலெக்ஸ் said...

Can we render instrumental? or should we only sing?

SurveySan said...

cyril, since there will be a survey to select the 'best', its better to sing.

Instrumental is fine too, but i cant add it to the survey :)

You should sing. will be good fit for your voice :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சர்வேசன்
பெருமையுடன் பாடி உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்! நான் பாட, நீர் ஓட, தகுந்த formatஇல் கிடைத்ததா என்று சொல்லுங்கள்! :-)
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

பிகு:
வீணையில் வாசித்தும் அனுப்பி வைக்கட்டுமா?

SurveySan said...

excellent KRS :) kadaisila Jaihind vittutteenga, but thats ok :)

//பிகு:
வீணையில் வாசித்தும் அனுப்பி வைக்கட்டுமா?//

please do. but, that wont be added to survey. i think cyril is also sending one instrumental piece.

SurveySan said...

peyar koduthavargaL paadi anuppavum.

மாதினி/Madhini said...

http://sarigamapadhanisa.blogspot.com/2007/08/blog-post.html
பாட்டு இங்க இருக்கு.நன்றி.

k4karthik said...

என்னையும் சேர்த்துக்கோங்க...

கீதம் இங்க இருக்கு...

http://www.esnips.com/doc/3b024009-ef96-4c4c-8cc5-99ca0b90f4b3/JanaGanaMana_k4k

SurveySan said...

thanks for the singing karthik! good singing!

k4karthik said...

போஸ்ட் போட்டாச்சு..

SurveySan said...

நன்றி karthik! :)

SurveySan said...

kavitha, பாடலுக்கு நன்றி!

அருமையா பாடியிருக்கீங்க.

ஷைலஜா said...

சர்வ்ஸ் நான் வந்துட்டே இருக்கேன்!!

SurveySan said...

ஷைலஜா, வாங்க வாங்க. உடனே அனுப்புங்க :)

Marutha Chelvi, அமக்களமா பாடிட்டீங்க. முதல் 1 நிமிஷ ம்யூசிக் இல்லாம பாடியிருக்கலாம் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://sirumuyarchi.blogspot.com/2007/08/blog-post_15.html

Marutham said...

:) Nandri surveysan....

Enudaya annaar avargal - indha padalai email'la keta udan enkitta ketadhu..."Mudhal oru nimidam- record potutu thoongitiya??"

I could have edited - adhu thonaamal poiruchu :) . Dnt want to make any change in the ARR track ;)

PadiyuLLa anaivarum arumayaaga padi ulaargal. :) Vaazhthukkal!

Marutham said...

Marutham is the name familiar to all in blogworld :)
Naney oru nimisham nama pera kanumnu nenachuten :P hehee

ஷைலஜா said...

wherez my JANAGANAMANA?!
shylaja

SurveySan said...

மருதம், நன்றி. திருத்தியாச்சு :)

ஷைலஜா, பாட்டு போட்டாச்சு. அருமை! as usual.

ஷைலஜா said...

சர்வ்ஸ்! பாட்டு கட் கட் ஆகி வருதே ஏன்? நான் அனுப்பியபோது ஒழுங்கா இருந்ததே? திரும்பப் பாடி அனுப்பவா?

சிறில் அலெக்ஸ் said...

Suvery,
here is my instrumental.

:))

SurveySan said...

சிறில்,

அமக்களம்.
pipe Organa? என்ன instrument அது?

கடைசில தான் டொயங்னு ஒரு மாதிரி முடிச்சிட்டீங்க?

சிறில் அலெக்ஸ் said...

Soft Strings - வயலின் தான். கடைசில ஒரு வாவ் effect போட்டேன். ச்சும்மா.

:))

SurveySan said...

கலக்கறீங்க சிறில்.

வாவ்!

//Soft Strings - வயலின் தான். கடைசில ஒரு வாவ் effect போட்டேன். ச்சும்மா.

:)) //

VSK said...

டைம் முடிஞ்சு போச்சா, இல்லை இன்னமும் பாடி அனுப்பலாமா?

VSK said...

ஆமா, ஷைலஜா ஏன் இவ்ளோ திக்கறாங்க!

என்ன ஆச்சு அவங்களுக்கு?

:))

SurveySan said...

VSK, தாராளமா அனுப்பலாம்.

60 பேர் வரவரைக்கும் சேத்துக்கிட்டே இருப்பேன்.

ஷைல்ஜா பாட்டு wav formatல பெருசா இருந்தது. அதனால இருக்கலாம். ஆனா, எனக்கு ஒழுங்கா கேக்குதே?

அது சரி, மத்தவங்க பாட்டெல்லாம் எப்படி? ;)

Anonymous said...

என்னுடைய பாடலை உங்கள் mailidkku அனுப்பு விட்டேன்!

SurveySan said...

Appaavi,

பாட்டு வரல.

கவிதா | Kavitha said...

அடுத்த வருஷத்துக்குள்ள பிரைஸ் கொடுத்துடுவீங்களா???

SurveySan said...

need 60 entries before I can conduct the survey :)

Appaavi said...

I actually sent a mail to your id surveysan2005@yahoo.com......

NP, plz find my song(???) here. http://www.esnips.com/doc/ba38bfae-d41d-41c5-b661-6c89ca88b838/janaganamana

SurveySan said...

thanks, added :)

good singing. anubavichu paadiyirukkeenga.

VSK said...

பாடி அனுப்பிட்டேன்!

போனஸா என் மனைவி பாடியதையும் இணைத்திருக்கிறேன்.

கேட்டுட்டு சொல்லுங்க!

தொடர்ந்த உதவிக்கு மிக்க நன்றி, சர்வேசன்!

SurveySan said...

VSK, Fantastic, as usual :)

Thanks for the bonus. Mrs.VSK's singing is excellent, better than yours ;)