Tuesday, October 30, 2007

13. ஒரு சிரி கண்டால் அது மதி - தமிழில் கேட்க ஆசா

"ஒரு சிரி கண்டால் கணி கண்டால் அது மதி"ன்னு ஒரு சூப்பர் மலையாளப் பாட்டு. நம்ம ராசா இசையில் சக்க போடு போட்டது.
ஏஷியாநெட்டு, சூரியா டி.வி பக்கம் போகும்போதெல்லாம் இந்த பாட்டுதான் ஓடிக்கிட்டு இருக்கும்.

பாடல் வந்த போது, இத எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே, ராசா எந்த பழைய பாட்ட உள்டா பண்ணி இத போட்டாருன்னு நான் நக்கீரன் மாதிரி எழுப்பின கேள்விக்கு சடார்னு பதில் வந்தது. 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் கண்ணோ' என்ற பாடலின் பல்லவிதான் ரீ-யூஸ் பண்ணிட்டாராம் ராசா.

ராசா, நீங்க எத வேணா ரீ-யூஸ் பண்ணுங்க, ஆனா, இந்த மாதிரி நச்சுனு ட்யூன் அடிக்கடி குடுத்துட்டே இருங்க. கடந்த பத்து வருஷத்துல வந்த உங்க 'டக்கர்' பாடல்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஏன் இப்படி? துள்ளி எழுந்து வாங்க. பழைய படி பட்டைய கெளப்புங்க. எங்க காதெல்லாம் ரணமாய்க்கெடக்கு. நல்ல பாட்டு கொடுங்கய்யா.
நீங்க விடர கேப்ப ஃபில் பண்ண இன்னும் யாரும் ரெடியாகல. ரஹ்மான் ஆடிக்கொரு தடவ, நல்ல பாட்ட கொடுக்கறாரு. ஹாரிஸ் பரவால்ல, ஓரளவுக்கு முயற்சி பண்றாரு. வித்யாசாகரும், பரத்வாஜும், யுவனும் மெனக்கெடறாங்க- ஆனா, பாவம் முடியல்ல.
அட்லீஸ்ட், நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு, வாரத்துக்கு ஒரு ட்யூன் பப்ளிஷ் பண்ணுங்க. யாராச்சும் எடுத்துக்கட்டும். தாங்க முடியலய்யா.

சரி மக்களே, இந்த நேயர் விருப்பம் என்னன்னா,
ஒரு சிரி கண்டால் பாடலுக்கு, நம்ம அருட்பெருங்கோ அழகா தமிழ்ல வரிகள் அமச்சிருக்காரு.
இங்க சொடுக்கி பாருங்க. அவர் பக்கத்துலயே பாடலையும் கேக்கலாம்.

கரோக்கே பாட விருப்பப் படறவங்க, ட்ரேக்க இங்க எடுத்துக்கலாம்.

கரோக்கே முறையில் பாடலை பாடி பதிய MixCraft உபயோகிக்கலாம்.

பாடலைக் கேளுங்கள், பரவசமடையுங்கள். பாடுங்கள், அனுப்புங்கள்.
MP3யாக உங்கள் பாடலை பதிந்து அனுப்பவேண்டிய முகவரி: surveysan2005 at yahoo.com
வேறு தளத்தில் upload செய்து உரலை பின்னூட்டவும் செய்யலாம்.
கரோக்கே செய்ய முடியாதவர்கள், வெறும் பாடலை பாடியும் அனுப்பலாம். இந்த ட்யூனுக்கு இசை எல்லாம் அவசியமே இல்லை ;)

அருட்பெருங்கோவின், வைர வரிகள்:

குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பயமானக் கண்களினுள்ளே பலமானப் பார்வைகளா
திறவாத இதழ்களினுள்ளே திமிரானப் புன்னகையா
ஏ பெண்ணே வலி போதுமினி மனதுமலருமா…


மொத்த பாடலையும் கேட்க, வாசிக்க, இங்கே சொடுக்கவும்.

நான் கண்டிப்பா பாடப் போறேன். அப்ப நீங்க?

வீடியோ, அவ்ளோ நல்லா இல்ல.

8 comments:

Unknown said...

சர்வேசன்,

போட்டியே வச்சாச்சா? :)

நன்றி நன்றி!! வலைப்பதிவர்கள்ல எத்தனை பாடகர்கள் இருக்காங்கனு தெரிஞ்சுக்கலாம்!!!

( ஆனாலும் வைர வரினு எல்லாம் சொல்றது டூஊஊ மச்சுப்பா :) )

Thanjavurkaran said...

இதே போல் ஓர் அனுபவம் எனக்கும் உண்டு. ஒரு முறை ஆசியா நெட்டில் கட்சேரியில் பாடிய பட்டை கேட்டு ராஜா தான் மியூசிக் போட்டிருப்பார் என்று நினைத்து தேடியபோது என் யூகம் சரி. படம் அச்விண்டே அம்மா பாடல் மையினா குருவிக்கு மாலையிடு என்ற பாடல். மஞ்சரி மிக அழகாக பாடியிருப்பார். ஒருமுறை கேட்டு பார்க்கவும். இப்போது இது போன்ற இசைகல்வை தமிழ் பாடல்களில் செய்வது இல்லை ராஜா. ஏன்

SurveySan said...

arutperungo,
//ஏ பெண்ணே வலி போதுமினி மனதுமலருமா//

idhu vaira varigaledhaan ;)


thanjavurkaran,
maina kuruvikki ketttuttu vaaren.

;)

SurveySan said...

Padagargal thevai ;)

Anonymous said...

did you get my song?

-ppi

SurveySan said...

anony, just saw your message.
really sorry for the delay.

can you please resend?

SurveySan said...

இதையும் யாரும் கண்டுக்கலியா?

Maria Davidson said...

windows 10 iso 64bit crackk
drivermax pro registration key
final cut pro crack
windows 8 crack
spire vst crack
sparkbooth crack
hwidgen crack
lizardsystems wi-fi scanner crack
razer cortex game booster crack
vectric aspire crack